» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசு மருத்துவமனையில் அமைச்சர் திடீர் ஆய்வு

வியாழன் 19, செப்டம்பர் 2019 8:26:51 AM (IST)

தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு நேற்று ஆய்வு மேற்கொண்டார்.  

கோவில்பட்டியில் உள்ள தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு நேற்று ஆய்வு மேற்கொண்டார்.  உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வரும் ஆண், பெண் நோயாளிகளிடம் மருத்துவமனையில் உள்ள குறைகள், சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்த அவர், மருத்துவமனை சுகாதாரமாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தார். அப்போது, மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசன், மகப்பேறு சிகிச்சை பிரிவில் இருந்து பெண்கள் உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவிற்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது: ஹிந்தி மொழி திணிப்பு என்பது தமிழகத்தில் இருக்கக் கூடாது என்பது காலம் காலமாக அனைவரது கொள்கையாக உள்ளது. தற்போதுவரை இருமொழிக் கொள்கைதான் அதிமுகவின் கொள்கையாக இருந்து வருகிறது. ஹிந்தி திணிப்பு என்பது எந்தக் காலத்திலும் தமிழகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் பெற்றுத் தந்தது அதிமுக அரசுதான். ரயில்வே துறை தேர்வுகள் தமிழகத்தில் தமிழில் தான் நடத்த வேண்டும் என்ற உத்தரவை பெற்றுத் தந்துள்ளோம். தமிழ் மொழிக்கு அதிமுக அரசு என்றும் பாதுகாப்பாக இருக்கும் என்றார். பேட்டியின்போது, அதிமுக மாவட்ட விவசாய அணி துணைச் செயலர் ராமசந்திரன், ஆவின் பால் இயக்குநர் நீலகண்டன், அதிமுக ஒன்றியச் செயலர் அய்யாத்துரைப்பாண்டியன், நகரச் செயலர் விஜயபாண்டியன் உள்பட பலர் உடனிருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD
Anbu Communications

Black Forest Cakes
Thoothukudi Business Directory