» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மோட்டார் பைக்கில் வைத்து இருந்த ரூ.70 ஆயிரம் திருட்டு

வியாழன் 19, செப்டம்பர் 2019 8:06:14 AM (IST)

தூத்துக்குடியில் லாரி செட் மேற்பார்வையாலர் மோட்டார் பைக்கில் வைத்து இருந்த ரூ.70 ஆயிரத்தை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி முத்தம்மாள் காலனியை சேர்ந்தவர் சுப்புராஜ். இவருடைய மகன் திருவடிசாமி(வயது 35). இவர் தூத்துக்குடி மடத்தூர் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு தனியார் லாரி செட்டில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலையில் லாரிகளுக்கு டீசல் போடுவதற்காக ரூ.70 ஆயிரம் பணத்தை, மோட்டார் சைக்கிள் பெட்ரோல் டேங்க் கவரில் வைத்துக் கொண்டு அலுவலகத்துக்கு புறப்பட்டார்.

அவர் ஜோதிநகர் விலக்கு பகுதியில் வந்த போது, சிறுநீர் கழிப்பதற்காக மோட்டார் சைக்கிளை ரோட்டோரத்தில் நிறுத்தி விட்டு சென்றாராம். சிறிது நேரத்தில் திரும்பி வந்த போது, மோட்டார் சைக்கிள் கவரில் வைத்து இருந்த பணத்தை யாரோ மர்ம நபர் திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து, குறிப்பிட்ட நேரத்தில் அந்த வழியாக சென்ற நபர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

CSC Computer Education



Nalam Pasumaiyagam


Anbu Communications



Thoothukudi Business Directory