» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கொலை முயற்சி வழக்கில் 4பேருக்கு 10ஆண்டு சிறை : திருச்செந்தூர் நீதிமன்றம் தீர்ப்பு

புதன் 18, செப்டம்பர் 2019 5:34:40 PM (IST)

கொலை முயற்சியில் ஈடுபட்ட 4பேருக்கு 10ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்செந்தூர் சார்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. 

தூத்துக்குடி மாவட்டம், பழையகாயல் தெற்கு தெருவைச் சேர்ந்த தாசன் மகன் ஆரோக்கிய ஜோசப் செல்வம்-53. ஊர்த் தலைவரான இவர் கிராம நிதியை மோசடி செய்ததாக கருதி பிச்சையா என்பவர் புதிய ஊர்த் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் பழையகாயல் பரிபூரணநகரைச் சேர்ந்த லஷ்தர் மகன் விஜயன்(32) என்பவர் பிச்சையாவுக்கு ஆதரவாக இருந்ததாக கூறி ஆரோக்கிய ஜோசப் செல்வம், பழையகாயலை சேர்ந்தவர்களான அசோகன் மகன் சாலமோன் ராயன்(32),  நஸ்ரேன் மகன் மைக்கல் அந்தோனி (66), மற்றும் தேவதாஸ் டிமலின் மகனான பூரண ஜீவன் டிமல் (57) ஆகியோருடன் சேர்ந்து 17.12.2015 அன்று பழையகாயல், பஸ் ஸ்டாப் அருகில் விஜயனை வழிமறித்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து விஜயனின் சகோதரர் வினோத்குமார்(40) அளித்த புகாரின் பேரில் ஆத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து சாலமோன் ராயன், ஆரோக்கிய ஜோசப் செல்வம், மைக்கல் அந்தோனி மற்றும் பூரண ஜீவன் டிமல் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு திருச்செந்தூர் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த திருச்செந்தூர் சார்பு நீதிமன்ற நீதிபதி  பரமேஸ்வரி,  குற்றம்சாட்டப்பட்ட சாலமோன் ராயன், ஆரோக்கிய ஜோசப் செல்வம், மைக்கல் அந்தோனி மற்றும் பூரண ஜீவன் திமல் ஆகியோர் குற்றவாளிகள் எனதீர்ப்பு வழங்கி அவர்கள் 4பேருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா ரூபாய் 6000/- அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Friends Track CALL TAXI & CAB (P) LTD


Anbu CommunicationsThoothukudi Business Directory