» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா பதுக்கிய 3பேர் கைது

புதன் 18, செப்டம்பர் 2019 5:31:01 PM (IST)

தூத்துக்குடி, எட்டயபுரத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த 3பேரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி வடபாகம் காவல்நிலைய உதவி ஆய்வாளர்  ரவிகுமார் தலைமையிலான போலீஸார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் மயானபகுதி அருகே அதே பகுதியை சேர்ந்த சித்திரவேல் மகன் மாரியப்பன் என்ற மெக்ஸ் (22), மற்றும்  போல்பேட்டை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த அந்தோணி சேவியர் மகன் ராபர்ட் விமல்ராஜ் (22) ஆகியோர் சுமார் 1¼ கிலோ கிராம் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து உதவி ஆய்வாளர்  ரவிகுமார் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு)  கோகிலா வழக்கு பதிவு செய்து மாரியப்பன் என்ற மெக்ஸ் மற்றும் ராபர்ட் விமல்ராஜை கைது செய்தார்.

எட்டயபுரத்தில் ஒருவர் கைது 

எட்டயபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  விஜயகுமார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது ஏராச்சி ரோட்டுப் பகுதியில் கோவில்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் செந்தில் மாரிக்கண்ணன் (22) என்பவர் 50 கிராம் எடையுள்ள ஏழு கஞ்சா பாக்கெட்டுகள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து எட்டயாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து செந்தில்மாரி கண்ணனை கைது செய்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

CSC Computer Education



Black Forest Cakes


Anbu Communications




Thoothukudi Business Directory