» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மனைவியை இரும்பி கம்பியால் தாக்கிய கணவர் கைது : மதுகுடிக்க பணம் தராததால் வெறிச்செயல்

புதன் 18, செப்டம்பர் 2019 5:26:47 PM (IST)

காயல்பட்டினத்தில் மதுகுடிக்க பணம் தராததால் மனைவியை இரும்பி கம்பியால் தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டார். 

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் மங்களவாடி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷம் (40), இவரது கணவர் சங்கர் (43). இவர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.  சங்கருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. சம்பவத்தன்று சங்கர்,  மது அருந்துவதற்கு மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். இதற்கு சந்தோசம் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சங்கர், மனைவியை தவறாக பேசி இரும்பு கம்பியால்  தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சந்தோஷம் அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர்  சுப்பிரமணியன் வழக்கு பதிவு செய்து சங்கரை கைது செய்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Nalam Pasumaiyagam

Black Forest Cakes

CSC Computer Education


Anbu Communications




Thoothukudi Business Directory