» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கைப்பேசி மாணவர்களுக்கு அவசியமா? அநாவசியமா? அன்னம்மாள் கல்வியியல் கல்லூரியில் பட்டிமன்றம்

புதன் 18, செப்டம்பர் 2019 4:49:20 PM (IST)தூத்துக்குடி அன்னம்மாள் கல்லூரியில் மாணவர்களுக்கு கைப்பேசி: அவசியமா? அநாவசியமா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது

தூத்துக்குடி, அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியின் வரலாற்றுக் கழகத்தின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு கைபேசி : அவசியமா? அநாவசியமா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்ட பட்டிமன்ற விழாவில் வரலாற்றுத் துறை உதவிப்பேராசிரியர் ஜெயபார்வதி வரவேற்புரையாற்றினார். 

கல்லூரி முதல்வர் அ.ஜாய்சிலின் சர்மிளா துவக்கவுரையாற்றினார். கல்வியியல் இளங்கலை மாணவிகளான ஷைனி காயத்ரி, லியான்சி, சித்திரைவடிவு ஆகியோர் ஆதரித்தும் பிரியங்கா, திவ்ய பாரதி, மௌனிகா ஆகியோர் எதிர்த்தும் பேசினர். காமராஜர் கல்லூரி, வரலாற்று துறை, உதவி பேராசிரியர், ஆ.தேவராஜ் பட்டிமன்றத்தின் இருதரப்பு வாதங்களையும் கேட்டு ஆராய்ந்து கல்லூரி மாணவர்களுக்கு கைபேசி அவசியமே என்று தீர்ப்பு வழங்கினார். நிறைவாக வரலாற்றுக் கழக செயலர் பொற்கொடி நன்றியுரை வழங்கினார். 


மக்கள் கருத்து

உண்மைSep 18, 2019 - 09:53:37 PM | Posted IP 108.1*****

அனாவசியம்..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Friends Track CALL TAXI & CAB (P) LTD
Anbu Communications
Thoothukudi Business Directory