» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெரிய சரக்கு கப்பலை கையாண்டு வஉசி துறைமுகம் சாதனை

புதன் 18, செப்டம்பர் 2019 1:19:19 PM (IST)வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 89,777 மெட்ரிக் டன் சரக்குகளுடன் கூடிய பெரிய கப்பலை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 16.09.2019 அன்று சரக்குதளம் ஒன்பதில் 89,777 மெட்ரிக் டன் சரக்குகளுடன் கூடிய பெரிய கப்பலை கையாண்டு புதியசாதனை படைத்துள்ளது. பனமா நாட்டு கொடியுடன் எம்.வி. என்பிஏவேர்மீர் என்ற இக்கப்பல் 234.98 மீட்டர் நீளமும், 38மீட்டர் அகலமும் மற்றும் 14.16மீட்டர் மிதவைஆழம் கொண்டது. இக்கப்பல் அமெரிக்கா நாட்டிலுள்ள பால்டிமோர் என்ற துறைமுகத்திலிருந்து 89,777 டன் நிலக்கரியை இந்தியா சிமெண்ட் நிறுவனத்திற்கு எடுத்து வந்துள்ளது. இதற்கு முன்பு 25.07.2019 அன்று எம்.வி. காமாக்ஸ் எம்பரர் என்ற கப்பலின் மூலம் 85,224 டன் சுண்ணாம்புக் கல் கையாளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இக்கப்பல் சரக்குதளம் 9-ல் நாள் ஒன்றுக்கு 50,000டன் சரக்குகளை கையாளும் திறன் கொண்ட மூன்று நகரும் பளுதூக்கிகள் மூலம் சரக்குகள் கையாளப்படுகிறது. இக்கப்பலின் மொத்த சரக்குகளும் 18.09.2019 இன்று இரவு 10 மணிக்குள் கையாளப்படும். இக்கப்பலின் முகவர்கள் பென் லைன் ஏஜென்சிஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் ஸ்டிவிடோர் செட்டிநாடு லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட், தூத்துக்குடி ஆவர்.வ.உ.சிதம்பரனார் துறைமுகம் நடப்புநிதியாண்டுஆகஸ்ட் 2019வரை 5.26மில்லியன் டன் நிலக்கரியை கையாண்டுள்ளது.(கடந்தநிதியாண்டுஆகஸ்ட் 2018 வரை5.21 மில்லியன் கையாளப்பட்டது).

வ.உ.சிதம்பரனார் துறைமுகபொறுப்புக் கழகத் தலைவர் ராமச்சந்திரன் இந்த சாதனையை படைக்க காரணமாக இருந்த அனைத்து துறைமுக உபயோகிப்பாளர்கள், கப்பல் முகவர்கள், அனைத்து அதிகாரிகள் ,ஊழியர்கள்,பளுதூக்கி இயந்திரம் இயக்குபவர்கள் மற்றும் அயராது உழைக்கும் தொழிலாளர்கள் அனைவரையும் பாராட்டியதுடன், வ.உ.சிதம்பரனார் துறைமுகம் தொடர்ந்து 14 மீட்டர் மிதவை ஆழமுடைய பெரிய கப்பல்களை கையாளுவதினால் தென்தமிழகத்தின் சர்வதேச கடற் வாணிபத்தின் அடுத்தநிலைக்கு முன்னேறியுள்ளது என்று கூறினார்.


மக்கள் கருத்து

ப சதிஷ் குமார்Sep 19, 2019 - 10:00:03 AM | Posted IP 162.1*****

நான் ஒரு marine college மாணவன் தூத்துக்குடி துறைமுகம் NBA vermeer ship போலவே இன்னும் மிக பெரிய கப்பல் கலை கையாள வேண்டும் என்று நான் விரும்புறன் the merchant navy my aim in life thank to all

RaajSep 19, 2019 - 01:53:18 AM | Posted IP 162.1*****

Oru doubut ithu thana velaye ithulam sathanayaa

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes
Thoothukudi Business Directory