» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் 3 இளம்பெண்கள் திடீர் மாயம்

புதன் 18, செப்டம்பர் 2019 12:08:16 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் 3 இளம்பெண்கள் திடீரென மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் மாடத்தி (20), கடந்த 14ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அதன்பின்னர் வீடு திரும்பிவரவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் தெரியவில்லை. இதுகுறித்து செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் ரகுராஜன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 

கணவர் மறைவு... பெண் மாயம்

தூத்துக்குடி மாவட்டம்,  நாலாட்டின்புதூர் அருகேயுள்ள சிதம்பராபுரம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் மனைவி சுகந்தி (35). தர்மலிங்கம் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். இதையடுத்து சுகந்தி மாமியாருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், அவர் கடந்த 16ம் தேதி வீட்டை விட்டு சென்றார். அதன் பின்னர் அவர் திரும்பிவரவில்லையாம். இதுகுறித்து புகாரின் பேரில் நாலாட்டின்புதூர் இன்ஸ்பெக்டர் சுபதேவி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

குடும்பத்தகராறில் பெண் மாயம் 

தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் பாரதி தெருவைச் சேர்ந்தவர் துங்கன் மனைவி வீரலெட்சுமி (38). கணவன் -மனைவி தகராறில் கடந்த 15ம் தேதி வீரலெட்சுமி வீட்டை விட்டு சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் தெரியவில்லை. இதுகுறித்து அவரது கணவர் அளித்த புகாரின் பேரில் கடம்பூர் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications



Nalam Pasumaiyagam

Black Forest Cakes


CSC Computer Education




Thoothukudi Business Directory