» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு : தூத்துக்குடியில் மர்ம நபர்கள் கைவரிசை!!

புதன் 18, செப்டம்பர் 2019 11:58:41 AM (IST)

தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி நியூசுந்தரம் நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (62). இவர், தூத்துக்குடி சால்ட் அசோசியேஷனில்  கணக்காளராக வேலைபார்த்து வருகிறார். நேற்று வீட்டை பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றுள்ளார். மாலையில்  அவர் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 5½ பவுன் நகை, மற்றும் 16,500 ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவ்நதது. இதுகுறித்து சந்திரசேகர் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் மந்திரமூர்த்தி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Black Forest Cakes




Friends Track CALL TAXI & CAB (P) LTD

Anbu Communications



Thoothukudi Business Directory