» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சலவைத்துறை : பூங்கா, வணிக வளாகம் கட்ட எதிர்ப்பு

புதன் 18, செப்டம்பர் 2019 11:31:19 AM (IST)தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமையவுள்ள சலவைத்துறையில் பூங்கா மற்றும் கடைகள் அமைக்க கூடாது என சலவைத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இது தொடர்பாக தூத்துக்குடி சலவைத் தொழிலாளர் சங்கம் சார்பில் சலவைத் தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகையி்ட்டு அளித்த மனு: தூத்துக்குடியில் சலவைத்துறை கடந்த 1987ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. ஆனால், 30 வருட காலமாக தண்ணீர் வராத காரணத்தினால் சலவைத் தொழிலாளர்களே உறை கிணறு அமைத்து சலவைத் தொழில் செய்து வருகிறார்கள். தண்ணீர் வசதி கோரி, சலவைக்கூட அறைகளை பழுது பார்த்து தரக்கோரியும், சுற்றுச் சுவார் கட்டக்கக் கோரியும் கடந்த 16.07.18 அன்று மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தோம். மனுவை பெற்ற ஆணையர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அனைத்து வசதிகளுடன் கூடிய சலவைத்துறை அமைத்து தருவதாக உறுதியளித்தார். 

இந்நிலையில், தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமையவுள்ள சலவைத்துறையில் மாற்றங்கள் செய்ய வேண்டும். திட்டவரைப்படி அறைகள் அமைத்தால் துணிகளை உலர்த்துவதற்காக அவற்றை வெளியே சுமந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படும். எனவே, பழைய அமைப்பின் படியே அறைகளை கட்டித் தரவேண்டும். மேலும், சலவைத் துறையில் பூங்கா அமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதன் 50மீ தொலைவில் எம்ஜிஆர் பூங்கா உள்ளது. சுமார் 5ஆயிரம் தொழிலாளர்கள் குடும்பம் உள்ளது. அனைவரும் தொழில் செய்ய இடம் போதாது. எனவே பூங்கா அவசியமற்றதாகும். பூங்கா அமைக்கும் திட்டத்தை கைவிட்டு குளத்தை பெரிதாக அமைத்துக் கொடுத்தால் நிலத்தடி நீர் பெருகும்.  சலவைத்துறை வாசலில் 20 கடைகள் கொண்ட வணிக வளாகம் கட்டப்பட உள்ளதாக தெரிகிறது. 

நாங்கள் செய்யும் சலவைத் தொழில், அயனிங் கடைகள் மக்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்தால்தான் மக்கள் துணி கொடுக்க வருவார்கள். எனவே கடைகள் தேவையில்லை. மாநகராட்சியின் வருமானத்திற்கு சலவைத் தொழிலாளர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதை கருத்திற் கொண்டு, பூங்கா, நடைபாதை, கடைகள் கட்ட செலவிடும் தொகையை சலவைத் துறையை சுற்றி காலனி வீடுகள் அமைத்துக் குறைவான வாடகை வசூல் செய்தால் மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கும். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதில், சலவைத் தொழிலாளர் சங்கம்(அண்ணா நகர்) தலைவர் காளியப்பன், செயலாளர் பரமசிவன், பொருளாளர் ஐயம்பெருமாள், அண்ணா நகர் 2வது சங்கம் செயலாளர் வள்ளி, சண்முகபுரம் சங்கத் தலைவர் சொக்கலிங்கம், செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் பாலசுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

M.sundaramSep 18, 2019 - 02:31:35 PM | Posted IP 162.1*****

It is a genuine demand from the socially and economically people. Their grievances should be redressed on humanitarian ground. Their life supersedes the artificial beauty of the area . The area can be improved for improving their trade work.

Mullai arasu D.m.eSep 18, 2019 - 12:14:08 PM | Posted IP 162.1*****

Thoothukudi smart city kk

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications


Black Forest Cakes


Friends Track CALL TAXI & CAB (P) LTD
Thoothukudi Business Directory