» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசு அனுமதியை முறைகேடாக பயன்படுத்தி மணல் விற்பனை : அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

புதன் 18, செப்டம்பர் 2019 10:41:00 AM (IST)


தூத்துக்குடி மாவட்டத்தில் கரம்பை மண் அள்ள அரசு கொடுத்துள்ள அனுமதியை முறைகேடாக பயன்படுத்தி மணல் விற்பனை நடப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

த்துக்குடி மாவட்டம், பரமன்குறிச்சியில் மாவட்ட ஆட்சியரின் முன்னோடி மனு நீதி நாள் முகாம் நடந்தது. இதில் திருச்செந்தூர் சமுக நலன் திட்ட தாசில்தார் ராஜ்குமார் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். முகாமில் ஆம் ஆத்மி தூத்துக்குடி மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் குணசீலன், திருச்செந்தூர் சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் சோடா ரவி, மதிமுக மாவட்ட மாணவரணி நசீர், தமிழக மாணவர் இயக்க நிர்வாகி மணிவண்ணன் உள்ளிட்டோர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது : தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு இலவச கரம்பை மண் அள்ள அரசு கொடுத்துள்ள அனுமதியை முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது.

உடன்குடி அனல்மின் நிலைய பணிகளுக்கு வணிக ரீதியில் விற்பனை செய்து மண் கொள்ளை நடப்பதால் அரசுக்கு ரூ.150 கோடி அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. மணல் கொள்ளைக்கு வசதியாக திருச்செந்தூர் வட்ட குளங்களுக்கு தாமிரபரணி பாசன தண்ணீர் திறந்து விடாமல் இருப்பதால் விவசாயம், குடிநீர் வழங்கல் பணிகளில் பாதிப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மேலும், திருச்செந்தூரில் விடுதலை சிறுத்தை கட்சியினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மண் திருட்டு லாரிகளை வழக்கு பதிவு செய்யாமல் விடுவித்த திருச்செந்தூர் வருவாய் ஆய்வாளர் மாரியம்மாளை உடனே சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்க கோரியும் மனு அளிக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications

Black Forest CakesCSC Computer Education

Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory