» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

உள்ளாட்சி தேர்தலை எந்த நேரத்திலும் சந்திக்க தயார் - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

புதன் 18, செப்டம்பர் 2019 10:26:17 AM (IST)

உள்ளாட்சி தேர்தலை எந்த நேரத்திலும் சந்திக்க தயாராக உள்ளோம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது: பள்ளிகளில் 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிந்து இறுதி முடிவு செய்யப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். 

உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு வார்டுகளை மறுவரையறை செய்யும் பணி 100 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. எனவே எந்த நேரத்திலும் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம். கூட்டுறவு சங்க தேர்தலும் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த மாதத்துக்குள் கூட்டுறவு சங்க மாநில நிர்வாகிகளும் நியமிக்கப்படுவார்கள். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எப்போதும் சர்ச்சைக் குரிய கருத்துகளையே தெரிவிப்பார். 

தமிழகத்தில் ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்துவதற்கு காவல் துறையினர் அனுமதியும் தந்து, பாதுகாப்பும் வழங்குகின்றனர். நாம் தமிழகத்தில் தமிழ் மொழியை புகழ்ந்து பேசுவது போன்று, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இந்தி பேசும் மாநிலத்தில் இந்தி மொழியை புகழ்ந்து பேசி உள்ளார். தமிழகத்தில் இருமொழி கொள்கையில் மாற்றம் கிடையாது. மத்திய அரசின் தேர்வுகளை தமிழில் எழுதும் வாய்ப்பை அ.தி.மு.க. அரசு பெற்று தந்தது. மேலும் தமிழ் மொழியை பாதுகாக்கும் அரசாகவும் உள்ளது. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை சிறப்பான முறையில் எதிர்கொண்டு சிறப்பான வெற்றியை பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

Black Forest Cakes

CSC Computer EducationAnbu Communications
Thoothukudi Business Directory