» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புதிய வழித்தடத்தில் பேருந்து: அமைச்சர் தொடங்கி வைத்தார்

புதன் 18, செப்டம்பர் 2019 8:22:47 AM (IST)கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கத்தை அமைச்சர்  கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பழைய பேரூந்து நிலையத்தில் திருத்தி அமைக்கப்பட்ட வழித்தடத்தில் நகர பேரூந்துகள் (டவுன் பஸ்) துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்துகொண்டு, திருத்தி அமைக்கப்பட்ட தோணுகால் (வழித்தட எண் 105), காப்புலிங்கம்பட்டி (வழித்தட எண் 19) ஆகிய வழித்தடத்தில் 2 நகர பேரூந்துகளை (டவுன் பஸ்) கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் முன்னிலை வகித்தார்.

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக இன்று கோவில்பட்டி பழைய பேரூந்து நிலையத்தில் திருத்தி அமைக்கப்பட்ட வழித்தடத்தில் தோணுகால் (வழித்தட எண் 105), காப்புலிங்கம்பட்டி (வழித்தட எண் 19) 2 நகர பேரூந்துகளை (டவுன் பஸ்) துவக்கி வைத்தார். தோணுகால் பேரூந்து (வழித்தட எண் 105) பள்ளி மாணவ, மாணவியர்கள் செல்வதற்கு ஏதுவாக தோணுகாலில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்பட்டு 8.45 மணிக்கு கோவில்பட்டியை சென்றடைகிறது. 

மேலும், டியூசன் முடித்து வரும் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக கோவில்பட்டியில் இருந்து மாலை 6.25 மணிக்கு புறப்பட்டு 6.40 மணிக்கு தோணுகாலுக்கு சென்றடைகிறது. காப்புலிங்கம்பட்டி பேரூந்து (வழித்தட எண் 19) பள்ளி மாணவ, மாணவிகள் அதிக அளவில் பயன்பெறும் வகையில் கோவில்பட்டியில் இருந்து மாலை 4.20 மணிக்கு புறப்பட்டு 4.45 மணிக்கு காப்புலிங்கம்பட்டிக்கு சென்றடைகிறது. இதன் மூலம் பள்ளி மாணவ, மாணவியர்கள் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், பள்ளி முடிந்தபின் பாதுகாப்பாக வீட்டுக்கு செல்வதற்கும் இந்த பேரூந்துகள் பயனுள்ளதாக இருக்கும்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் துணை மேலாளர்கள் சசிகுமார், அழகிரிசாமி, கண்ணன், தூத்துக்குடி மாவட்ட கிளை மேலாளர் பொன்ராஜ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், துணைத்தலைவர் கணேஷ்பாண்டியன், முக்கிய பிரமுகர்கள் அய்யாத்துரைபாண்டியன், விஜயபாண்டியன், இ.பி.ரமேஷ், ராமச்சந்திரன், வேல்பாண்டி, ஹரிராம்சுப்பையா, நடிகர் ரவிமரியா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsFriends Track CALL TAXI & CAB (P) LTD

Black Forest Cakes


Anbu Communications

Thoothukudi Business Directory