» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாணவி சோபியாவிற்கு எதிரான மனித உரிமை மீறல் வழக்கு விசாரணை

செவ்வாய் 17, செப்டம்பர் 2019 7:44:36 PM (IST)

தூத்துக்குடி மாணவி சோபியாவிற்கு எதிரான மனித உரிமை மீறல் வழக்கு விசாரணை இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் மனு மீது 16.10.2019 அன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2018ம் வருடம் செப்டம்பர் 3-ம் தேதி தூத்துக்குடி விமான நிலையத்தில் அப்போதைய தமிழக பாஜக தலைவர், தற்போதய தெலுங்கானா மாநில ஆளுனர் டாக்டர் தமிழிசைக்கு எதிராக மாணவி சோபியா கோஷமிட்டார். இது குறித்து தமிழிசை அளித்த புகாரின்பேரில் போலீசார் சோபியாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இரவோடு இரவாக சோபியா கைது செய்யப்பட்டார். அதன்பின் மறுநாள் காலை அவர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். மாணவி சோபியாவுக்கு ஜாமின் வழங்கியது தூத்துக்குடி நீதிமன்றம் அவருக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்நிலையில் மாணவி சோபியாவிற்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அவரது தந்தை டாக்டர் சாமி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பொன்ராம் தூத்துக்குடி நகர காவல் துனை கண்காணிப்பாளர் பிரகாஷ் ஆய்வாளர்கள் திருமலை பாஸ்கர் அன்னத்தாய் , உதவி ஆய்வாளர்கள் லதா, நம்பிராஜன் ஆகியோர் மீது மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில் எதிர் மனுதாரர்கள் பொன்ராம், பிரகாஷ் , பாஸ்கர் , நம்பிராஜன் ஆகியோர் தங்களை வழக்கிலிருந்து விடுவிக்க கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரனை இன்று சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைமையகத்தில் நடைபெற்றது. 

இதை விசாரித்த மாநில மனித உரிமை ஆணையம் அம்மனு மீது வரும் அக்டோபர் மாதம் 16 ம் தேதி அன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என ஆணையம் தெரிவித்துள்ளது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் சுப.இராமச்சந்திரன் பெ.சந்தனசேகர் ஆகியோர் ஆஜரானார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD


Anbu Communications

Black Forest Cakes






Thoothukudi Business Directory