» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இந்தி திணிப்பு கருத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் : கனிமொழி எம்பி., பங்கேற்கிறார்

செவ்வாய் 17, செப்டம்பர் 2019 7:18:43 PM (IST)

தூத்துக்குடி வடக்கு – தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இந்தி திணிப்பு கருத்தைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் தூத்துக்குடி எம்பி., கனிமொழி கருணாநிதி பங்கேற்கிறார்.

இது குறித்து திமுக வடக்கு தெற்கு மாவட்ட செயலாளர்கள் கீதாஜீவன் எம்எல்ஏ., மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ., கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், நாட்டின் பொருளாதாரச் சரிவு – வேலை வாய்ப்புகள் இழப்பு – காஷ்மீர்ப் பிரச்சனை போன்ற முக்கியமான பிரச்சனைகளிலிருந்து இந்திய மக்களின் கவனத்தைத் திசை திருப்பிடும் திட்டத்துடன் இந்தியாவின் அடையாளமாக ஒரேயொரு மொழி இருக்க வேண்டும். இந்தி மொழிதான் அந்த அடையாளத்தைக் கொடுக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருப்பதற்கு, திராவிட முன்னேற்ற கழகம் கடும் கண்டனத்தைத் தொரிவித்துக் கொள்கிறது. 

அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள பிற மொழிகள் அனைத்தையும் புறக்கணித்து - இந்தி மொழி மட்டுமே இந்தியாவை ஒருங்கிணைக்கும் என்று உள்துறை அமைச்சர் கூறியிருப்பது – நாட்டின் பன்முகத்தன்மைக்கும், மொழி வாரி மாநிலங்களுக்கும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற தாரக மந்திரத்துக்கும் எதிரானது மட்டுமல்லாமல், அவற்றிற்கு விடப்பட்டிருக்கும் சவால் ஆகும். 

தமிழ்நாட்டில் பல்வேறு கட்டங்களில் பல்வேறு விதத்தில் இந்தி திணிப்பு ஏற்பட நினைத்த போதெல்லாம் பல்வேறு விதமான போராட்ட களங்கள் உருவாகி அது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதற்காக கொடுக்கப்பட்ட விலையுர்ந்த உயிர்ப்பலிகள் ஏராளம். அதன்பின் மத்தியில் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு அவர்கள் இந்தி பேசாத மக்கள் விரும்புகிற காலம் வரை இணைப்பு மொழியாக ஆங்கிலமும் நீடிக்கும் என்றும்; பிற மொழி பேசும் மக்கள் மீது இந்தி திணிக்கப்பட மாட்டாது என்று அளித்த உறுதிமொழியின்படி இந்தி எந்த மாநிலத்திலும் திணிக்கப்படமாட்டாது என்பதற்கு ஏற்ப இதுநாள் வரை மத்திய அரசு செயல்பட்டு வந்தது.

ஆனால் மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சி மூர்க்கத்தனமான முறையில் இந்தி திணிப்பில் ஈடுபட்டு - இந்தியாவை இந்திமயமாக்க திட்டம் தீட்டிச் செயல்படுவது, எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட மொழிகளைப் புறக்கணிப்பது மிகுந்த கவலையளிக்கிறது.ஆகவே இந்தித் திணிப்பை உடனடியாகக் கைவிட்டு, நாட்டை முன்னேற்றும் உருப்படியான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றும் இந்தி மட்டுமே இந்தியாவின் அடையாளம் என்று கூறி, தமிழ் மொழி உணர்வை அவமதித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா  தனது கருத்தை திரும்பப் பெற்று, நாடு மேம்பட வழிவிட வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி தொகுதி எம்.பி.,யும் தி.மு.க. மாநில மகளிரணி செயலாளர்  கனிமொழி கருணாநிதி தலைமையில் 20.09.2019 அன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் சிதம்பரநகர் பேரூந்து நிறுத்தம் அருகில் தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சார்பில் நடைபெறுகிறது. 

இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தி.மு.கழகத்திற்கு உட்பட்ட மாவட்டக்கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், மற்றும் ஊராட்சிக் கழகச் செயலாளர்கள், இளைஞரணி, மாணவரணி, மகளிரணி உள்ளிட திமு கழகத்தின் சார்பு அணிகளின் நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், கழக செயல்வீரர்கள், தமிழ் மீது பற்று கொண்ட தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் என பெருந்திரளாகக் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் வெற்றியடையச் செய்திட அன்புடன் அழைக்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

இவன்Sep 18, 2019 - 06:18:58 PM | Posted IP 162.1*****

தெலுங்கு சுடாலின் குடும்ப பள்ளிக்கூடத்துல போய் சொல்லுமா ..

குமார்Sep 18, 2019 - 01:42:41 PM | Posted IP 162.1*****

உங்களின் நாடகம் இனியும் மக்களிடம் எடுபடாது....நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் ஹிந்தி கற்றுக்கொள்ளலாம், ஹிந்தி கற்று தரும் பள்ளிகளை நடத்தலாம்....ஆனால் ஏழை குழந்தைகள் ஹிந்தி கற்றுக்கொள்ளக்கூடாது? என்ன நாடகம்? உங்களின் ரெட்டை வேடத்தை மக்கள் இப்பொழுது புரிந்து கொன்றுள்ளனர்...

IndianSep 17, 2019 - 07:46:08 PM | Posted IP 162.1*****

When Kanimozhi is speaking Hindi fluently, why others should not study Hindi, if they want, when it is not compulsory?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Friends Track CALL TAXI & CAB (P) LTDBlack Forest Cakes

Thoothukudi Business Directory