» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி இரட்டைக் கொலை: முக்கிய குற்றவாளி நாகர்கோவில் நீதிமன்றத்தில் சரண்

செவ்வாய் 17, செப்டம்பர் 2019 5:09:44 PM (IST)

தூத்துக்குடியில் கடந்த சில தினங்களுக்கு முன் 2பேர் வெட்டிக் கொலை வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி நாகர்கோவில் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். 

தூத்துக்குடி சிவந்தாகுளம் 2-வது தெருவை சேர்ந்தவர் முருகேசன் (40), கப்பல் இன்ஜினீயர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த கோவில் கொடை விழாவுக்காக அவர் விடுமுறையில் ஊருக்கு வந்து உள்ளார். கடந்த 15ம் தேதி இவர் தெருவில் சென்று கொண்டிருந்தபோது, வேகமாக பைக்கில் வந்த வாலிபரை கண்டித்துள்ளார். இந்நிலையில், அன்றைய தினம் மாலையில் முருகேசன் சிவந்தாகுளம் மாரியம்மன் கோவில் அருகே, ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் தனது நண்பரான பிரையண்ட்நகர் 9-வது தெருவை சேர்ந்த விவேக் (40) என்பவருடன் பேசிக் கொண்டிருந்தார். 

அப்போது, அங்கு வந்த கும்பல் திடீரென முருகேசன், விவேக் ஆகியோரை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது. தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த இரட்டைக் கொலை தொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரட்டைக் கொலை தொடர்பாக இதுவரை 8பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில் இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியாக போலீசாரால் தேடப்பட்டு வந்த தூத்துக்குடி முனியசாமிபுரத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் மணி என்கிற மணிகண்டன் (21) என்பவர் நாகர்கோவில் ஜே.எம். 1 நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார். 


மக்கள் கருத்து

BABYSep 19, 2019 - 06:01:11 PM | Posted IP 173.2*****

இவர்கள் அனைவரும் சாகும் வரை அடித்து கொள்ள வேண்டும் .. இப்படி இருப்பதனால் தான்நம்மால் நிம்மதியாக வாழ முடிய வில்லை

மனோSep 18, 2019 - 06:20:26 PM | Posted IP 162.1*****

தூக்கு தண்டனை கொடுத்தால் தான் பிற குற்றவாளிகள் திருந்துவார்கள் ...

manithanSep 18, 2019 - 12:59:04 PM | Posted IP 162.1*****

தண்டனைகள் கடுமையாக இருக்க வேண்டும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD


Anbu Communications

Black Forest CakesThoothukudi Business Directory