» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குளங்கள் தூர்வாரும் பணிகள் செப்.30க்குள் நிறைவு பெறும்: ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேட்டி

செவ்வாய் 17, செப்டம்பர் 2019 4:12:31 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் குளங்கள் தூர்வாரும் பணிகள் செப்டம்பர் 30க்குள் முடிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். 

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டம் கோரம்பள்ளம் கோட்டத்pன்கீழ் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு மூலம் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின்கீழ் திருவரங்கனேரி குளத்தில் ரூ.42 லட்சம் மதிப்பில் குளம் தூர்வாரும் பணிகள் மற்றும் புனரமைப்பு பணிகளை இன்று  மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி,  ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர், தூர்வாரப்பட்ட வரத்துக் கால்வாய் மற்றும் உபரி கால்வாய் ஆகியவற்றை பார்வையிட்டார். மேலும், நடைபெற்று கொண்டிருந்த மறுகால் சீரமைத்தல், தடுப்பு சுவர் கட்டுதல், கரையை பலப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 37 கண்மாய்கள் சுமார் ரூ.14 கோடி மதிப்பிட்டில் தூர்வாறும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் 70 சதவிதம் முடிந்துவிட்டன. மேலும், ஊரக வளர்ச்சி துறையின் மூலம் 87 சிறுபாசன குளங்கள், 472 ஊரணிகள், குட்டைகள் தூர்வாரும் பணிகளும் நடைபெற்று வருகிறது. குடிமராமத்து திட்டத்தின்கீழ் ஆயக்கட்டு விவசாயிகள் பயண்பெறும் வகையில் கண்மாய்களை சீரமைப்பு செய்தல், மதகுகளை பழுதுபார்தல், மிகை நீர்வழித்தோடிகளை பழுதுபார்த்தல், வரத்துக் கால்வாய் தூர்வாருதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ரூ.25 லட்சம் முதல் ரூ.80 லட்சம் மதிப்பில் புனரமைப்பு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. 

மேலும் 50க்கும் மேற்பட்ட குளங்கள் தனியார் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதி உதவியுடன் குளங்கள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. நமது மாவட்டத்தில் ஸ்கேடு, டி.வி.எஸ். உள்ளிட்ட பல தனியார் நிறுவனங்கள் மூலம் குளங்கள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊருக்கு 100 கை திட்டத்திலும் பொதுமக்கள் பங்களிப்புடன் சிறுகுளங்கள் தூர்வாரப்பட்டு வருகிறது.திருவைகுண்டம் வட்டம் கோரம்பள்ளம் வடிநில கோட்டத்திற்குட்பட்ட திருவரங்கனேரி குளத்தில் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின்கீழ், மடை பழுதுபார்த்தல், கரையை பலப்படுத்துதல், வரத்து கால்வாய் தூர்வாறுதல், உபரி நீர் கால்வாய் தூர்வாறுதல், மடை பழுதுபார்த்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ரூ.42 லட்சம் மதிப்பில் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி பணிகள் திருவரங்கனேரி குளம் பாசன விவசாயிகள் சங்கத்தின் 10 சதவீதம் பங்களிப்புடன் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் இன்று நேரில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. நடைபெற்றுக்கொண்டிருக்கும் பணிகளை விரைவாகவும், மழை காலத்திற்கு முன்னதாக முடித்து கண்மாயை நீர் நிரப்பிடும்வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய அரசின் அறிக்கையின்படி உடன்குடி, சாத்தான்குளம், ஓட்டப்பிடாரம் பரிவல்லிக்கோட்டை பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்கும், பசுமையை பேணுவதற்கும் அரசு, தனியார் கட்டிடங்கள் மற்றும் வீடுகளில் மழைநீர் சேமிப்பு அமைப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த பகுதிகளில் சுமார் 10 லட்சம் மரக்கன்றுகளும் நடப்பட்டுள்ளது. விவசாயிகள் நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு குறைவான தண்ணீர் மூலம் அதிக மகசூல் பெறுவதற்கு வேளாண் துறை மூலம் கிசான் மேளா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு விழிப்புணர்வு பணிள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், சொட்டு நீர் பாசனம் மூலம் விவசாயம் செய்வது குறித்தும் விவசாயிகளுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் 254 மாவட்டங்களில் மரக்கன்றுகள் நடுதல், மழைநீர் சேமிப்பு அமைப்புகள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தினை செயல்படுத்துவதில் நமது மாவட்டம் இந்தியாவிலேயே மூன்றாவது இடத்தில் உள்ளது. குளங்கள் தூர்வாரும் பணிகள் அனைத்தும் செப்டம்பர் 30க்குள் மழைக்காலத்திற்கு முன்பு முடிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் மாரியப்பன், இளநிலை பொறியாளர் பாலசுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.சீனிவாசன், திருவைகுண்டம் வட்டாட்சியர் சந்திரன், கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்புலட்சுமி, சிவராஜன், திருவரங்கனேரி விவசாய பாசன சங்க தலைவர் முத்துராமலிங்கம், செயலாளர் கணேசன், பொருளாளர் பொன்னுராமன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications




Nalam Pasumaiyagam

Black Forest Cakes

CSC Computer Education




Thoothukudi Business Directory