» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கொலை வழக்கில் தொடர்புடையவர் குண்டர் சட்டத்தில் கைது.

செவ்வாய் 17, செப்டம்பர் 2019 3:11:49 PM (IST)

தூத்துக்குடியில் கொலை கொள்ளை வழக்கில் தொடர்புடைய வாலிபர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி, முள்ளக்காடு சாமி நகரைச் சேர்ந்த தங்கமுனியசாமி மகன் தினேஷ் (20) என்பவர் கடந்த 19.10.2018 அன்று தூத்துக்குடி எஸ் எஸ். பிள்ளைத் தெருவைச் சேர்ந்த பாஸ்கர் மகன் மஹாராஜா (19) என்பவரை தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் கொலை செய்த வழக்கு உட்பட பல்வேறு கொள்ளை வழக்குகளில் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து தினேஷை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வடபாகம் காவல் ஆய்வாளர் பார்த்திபன், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அறிக்கை செய்தார். இதையடுத்து எஸ்பி அருண் பாலகோபாலன் பரிந்துரையின் பேரில் தினேஷை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டார். ஆட்சியர் உத்தரவின் பேரில் வடபாகம் காவல் ஆய்வாளர் தினேஷை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Black Forest Cakes


Anbu Communications



CSC Computer Education




Thoothukudi Business Directory