» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நர்சிங் மாணவி திடீர் மாயம்: போலீஸ் விசாரணை

செவ்வாய் 17, செப்டம்பர் 2019 12:17:01 PM (IST)

கோவில்பட்டி அருகே நர்சிங் கல்லூரி மாணவி திடீரென மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள இலந்தைபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகள் மதுபுஷ்பா (18) நாகர்கோவிலில் உள்ள நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், கடந்த 11ம் தேதி முதல் கல்லூரிக்குச் செல்லவில்லையாம். இந்த விபரம் தெரியவரவே அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்துள்ளனர். ஆனால் மதுபுஷ்பாவைப் பற்றி எந்த தகவலும் தெரியவில்லை. இதுகுறித்து அவரது தந்தை ராமசாமி கோவில்பட்டி காவல் கிழக்கு நிலையத்தில் நேற்று புகார் செய்தார். புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் ஐயப்பன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Anbu Communications


Black Forest Cakes







Thoothukudi Business Directory