» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாமியாரை உலக்கையால் தாக்கி கொல்ல முயன்ற மருமகன் கைது

செவ்வாய் 17, செப்டம்பர் 2019 12:03:17 PM (IST)

கோவில்பட்டியில் மாமியாரை உலக்கையால் தாக்கி கொல்ல முயன்றதாக மருமகனை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கடலையூர் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்லையா மகன் பாலசுப்பிரமணியன் (49). இவரது மனைவி சுப்புலட்சுமி. இந்த தம்பதியரின் மகள் கோவில்பட்டியில் உள்ள தீப்பெட்டி ஆலையில் வேலைபார்த்து வருகிறார். அவருக்கு சுப்புலட்சுமியின் தாயாரும், பாலசுப்பிரமணியனின் மாமியாருமான அமிர்தம் (70) தினமும் சாப்பாடு கொண்டு செல்வாராம். 

இந்நிலையில், கடந்த 2 நாட்களாக அவர் சாப்பாடு கொண்டு செல்ல மறுத்துவிட்டாராம்.  இதனால் ஆத்திரம் அடைந்த பாலசுப்பிரமணியன்,  மாமியாருடன் தகராறில் ஈடுபட்டு, வீட்டில் கிடந்த உலக்கையால் மாரியாரின் தலையில் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அமிர்தம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து நாலாட்டின்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபதேவி வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

மனித உரிமைகள் கழகத்தின் முப்பெரும்விழா

வியாழன் 17, அக்டோபர் 2019 1:10:35 PM (IST)

Sponsored Ads





CSC Computer Education

Anbu Communications

Nalam Pasumaiyagam

Black Forest Cakes



Thoothukudi Business Directory