» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பள்ளி மாணவியை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபர் போக்ஸோ சட்டத்தின் கைது

செவ்வாய் 17, செப்டம்பர் 2019 11:48:58 AM (IST)

தூத்துக்குடியில் பள்ளி மாணவியை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 

தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் அருகேயுள்ள ஜம்புலிங்கபுரம் காலனியைச் சேர்ந்தவர் முத்துகுமார் மகன் கலைச்செல்வன் (19). இவர் தூத்துக்குடியைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவியை காதலித்து வந்துள்ளார். இருவரும் கடந்த 28.08.2019 அன்று வீட்டிற்கு தெரியாமல் ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டார்களாம். பின்னர் இருவரும் அவரவர் வீட்டில் வசித்து வந்துள்ளனர். 

மகளின் ரகசிய திருமணம் குறித்து தெரியவரவே பெண்ணின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண்ணின் தாயார் புகார் அளித்தார். அதில், மைனர் பெண்ணான தனது மகளை கலைச்செல்வன் ஏமாற்றி திருமணம் செய்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. அவரது புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வனிதா வழக்குப் பதிவு செய்து கலைச்செல்வனை கைது செய்தார். அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

மனித உரிமைகள் கழகத்தின் முப்பெரும்விழா

வியாழன் 17, அக்டோபர் 2019 1:10:35 PM (IST)

Sponsored Ads


Nalam Pasumaiyagam

Anbu Communications

Black Forest Cakes


CSC Computer Education





Thoothukudi Business Directory