» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மகள் காதல் திருமணம் செய்ததால் தந்தை தற்கொலை : தூத்துக்குடியில் பரிதாபம்

செவ்வாய் 17, செப்டம்பர் 2019 11:40:01 AM (IST)

தூத்துக்குடியில் மகள் காதல் திருமணம் செய்ததால் வேதனையில் தந்தை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 6வது தெருவைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (50). இவரது மனைவி சுமத்ரா. இந்த தம்பதியரின் மகள் கடந்த மாதம் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் ஊரைவிட்டு ஓடிச்சென்று திருமணம் செய்து கொண்டதால் அவமானமாக கருதிய தட்சினாமூர்த்தி மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று அவர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) கோகிலா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து

குமார்Sep 18, 2019 - 01:45:51 PM | Posted IP 173.2*****

மனதிற்கு மிகவும் வேதனையான சம்பவம், அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம் ....பெண்குழந்தைகளை மிகவும் கண்ணும் கருத்துமாக வளர்க்கவேண்டிய தருணம் இது....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes

Friends Track CALL TAXI & CAB (P) LTD
Thoothukudi Business Directory