» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் - எஸ்ஐ மோதல்? போலீஸ் குவிப்பு

செவ்வாய் 17, செப்டம்பர் 2019 11:04:21 AM (IST)



தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் - சப் இன்ஸ்பெக்டர் மோதல் எதிராொலியாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு, தெர்மல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராமசந்திரன் என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வழக்கறிஞர் சின்னத்துரை என்பவர் உட்பட சிலர் நீதிமன்ற வளாக சுவரில் போஸ்டர் ஒட்ட முயன்றார்களாம். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த எஸ்ஐ இங்கு போஸ்டர் ஒட்டக்கூடாது என்றாராம். அப்போது சின்னதுரை, தான் வழக்கறிஞர் என்றும், வழக்கறிஞர் ஒருவரின் மறைவையொட்டியே போஸ்டர் ஒட்டுவதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து அவரது அடையாள அட்டையை காட்டுமாறு எஸ்ஐ ராமசந்திரன் கேட்டுள்ளார். 

இதையடுத்து சின்னத்துரை அங்கிருந்து சென்றுவிட்டாராம். இந்நிலையில்,  எஸ்ஐ ராமசந்திரன் இன்று காலை நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டுக் கொ்ணடிருந்தார். அப்போது அங்கு வந்த வழக்கறிஞர் சின்னத்துரை, இப்போது அடையாள அட்டை காட்ட வேண்டுமா? என்று கூறி எஸ்ஐ ராமசந்திரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து வைத்துள்ளனர். வழக்கறிஞர் - போலீஸ் அதிகாரி வார்த்தை மோதலால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் எதிரொலியாக தூத்துக்குடி  நீதிமன்ற வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

மனித உரிமைகள் கழகத்தின் முப்பெரும்விழா

வியாழன் 17, அக்டோபர் 2019 1:10:35 PM (IST)

Sponsored Ads


Anbu Communications


Nalam Pasumaiyagam



Black Forest Cakes

CSC Computer Education



Thoothukudi Business Directory