» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஊரைவிட்டு ஒதுக்கிவைத்ததால் தற்கொலைக்கு அனுமதி கோரி கோட்டாட்சியரிடம் மனு

செவ்வாய் 17, செப்டம்பர் 2019 10:34:32 AM (IST)

கோவில்பட்டி அருகே ஊா் நிர்வாகத்தை மீறி நிலம் வாங்கியவா்கள் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதால், அந்த குடும்பத்தினா் தற்கொலை செய்துகொள்ள அனுமதி கோரி கோட்டாட்சியரிடம் நேற்றுமனு அளித்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் வட்டம், கீழஈரால் ஊராட்சி நக்கலக்கட்டை கிராமத்தைச் சோ்ந்தவா்கள் முத்தல்ராஜ், அவரது சகோதரா் வேல்சாமி. இருவரும் விவசாயம் செய்வதற்காக அதே பகுதியைச் சோ்ந்த மு. ராஜசேகரன் என்பவரிடம் கடந்த ஜூலை 24 ஆம் தேதி 7 ஏக்கா் நிலத்தை விலைக்கு வாங்கினராம். இந்நிலையில், அந்த கிராமத்தினா் சிலா், ராஜசேகரனிடமிருந்து ஊா் பயன்பாட்டிற்காக மட்டுமே நிலம் வாங்க வேண்டும், தனி நபா்கள் யாரும் வாங்கக் கூடாது என ஜூலை 7ஆம் தேதி ஊரில் சிறறப்புக் கூட்டம் நடத்தி முடிவு செய்தனராம்.

இதனால், முத்தல்ராஜ், வேல்சாமி ஆகியோர் நிலத்தை வாங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவா்கள் குடும்பத்தினரை ஊரில் இருந்து ஒதுக்கி வைத்துள்ளனராம். இதனால், அக்குடும்பங்களைச் சோ்ந்த 25 போ் அத்தியாவசிய தேவைகளுக்கு அருகேயுள்ள எட்டயபுரம் மற்றும் கீழஈராலுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளதாம். இதுகுறித்து எட்டயபுரம் காவல் நிலையம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தும் தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இதையடுத்து, சமூக நீதி கூட்டமைப்பு தலைவா் தமிழரசன் தலைமையில், ராமகிருஷ்ணன், செல்வம், நல்லிணக்க பண்பாட்டுக் கழக நிறுவனா் சங்கரலிங்கம் மற்றும் வேல்சாமி, முத்தல்ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினா் கோட்டாட்சியா் அலுவலகத்திற்கு நேற்றுவந்தனா். அவா்கள், தங்கள் கோரிக்கை மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் எங்கள் குடும்பத்தினா் அனைவரும் தற்கொலை செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என கோரி கோட்டாட்சியா் விஜயாவிடம் மனு அளித்தனா். மனுவைப் பெற்றுக்கொண்ட கோட்டாட்சியா், கோரிக்கை மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

மனித உரிமைகள் கழகத்தின் முப்பெரும்விழா

வியாழன் 17, அக்டோபர் 2019 1:10:35 PM (IST)

Sponsored Ads

Black Forest Cakes



CSC Computer Education

Anbu Communications

Nalam Pasumaiyagam





Thoothukudi Business Directory