» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆவின் பாலகங்களை ஹோட்டலாக மாற்ற கூடாது : ஆவின் தலைவர் சின்னத்துரை பேச்சு

வியாழன் 12, செப்டம்பர் 2019 1:16:25 PM (IST)ஆவின் பாலகங்களை ஹோட்டலாக மாற்ற கூடாது என தூத்துக்குடியில் நடைபெற்ற கூட்டத்தில் ஆவின் தலைவர் சின்னத்துரை பேசினார்.

தூத்துக்குடி மாவட்ட ஆவின் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் ஒன்றிய விற்பனை முகவர்கள் கலந்தாய்வு கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் ஆவின் தலைவர் சின்னத்துரை தலைமை தாங்கினார். மாவட்டம் முழுவதுமுள்ள ஆவின் விற்பனை முகவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சின்னத்துரை பேசும் போது, தூத்துக்குடி மாவட்டம் 13 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் மாவட்டாகும். ஆனால் நாள் ஒன்றுக்கு 21 ஆயிரம் லிட்டர் ஆவின் பால் மட்டுமே விற்பனையாகிறது. 

முன்னர் திருநெல்வேலி மாவட்டத்தோடு இணைந்திருந்த காரணத்தால் ஆவின் பால்விற்பனை குறைவாக இருந்தது. தற்போது, அதை அதிகரிக்கும் நோக்கத்துடன் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு முடிவிற்குள், ஆவின் பால் விற்பனை 30 ஆயிரம் லிட்டர் ஆக உயர்தப்பட வேண்டும். ஆவின் பால் கலப்படமில்லாத பால். அரசு நிறுவனம் விற்பனை செய்கிறது என முகவர்களாகிய நீங்கள் தான் பொதுமக்களிடம் கூற வேண்டும். அதற்கு நீங்கள் ஒத்துழைப்பளிக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் 37 ஆவின் பாலகங்கள் செயல்பட்டு வருகிறது.

இதில் ஆவின் தயாரிப்பின் பொருட்கள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். ஆவின் பாலகங்களை ஹோட்டலாக மாற்றி விட கூடாது. தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான பீச், பூங்கா அருகில் ஆவின் அதிநவீன வசதி கொண்ட ஹை டெக் பார்லர் திறக்கப்பட உள்ளது. விரைவில் அதிநவீன பால்பண்ணை தூத்துக்குடியில் ஆரம்பிக்கப்பட உள்ளது. இன்னும் 10 நாட்களில் தூத்துக்குடி மாவட்டத்திற்கென்று தனி அலுவலகம் திறக்கப்பட உள்ளது. 2 அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். கூட்டத்தில் ஆவின் பாெதுமேலாளர் திரியோகராஜ்,விற்பனை மேலாளர் சாந்தி, தூத்துக்குடி செயலர் லலிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

மகாராஜாSep 14, 2019 - 11:50:32 AM | Posted IP 103.1*****

அய்யா இந்த முயற்சி iku வாழ்த்துக்கள்

நண்பன்Sep 12, 2019 - 08:52:51 PM | Posted IP 108.1*****

நிறைய பேர் அப்படி தான் வச்சிருக்காங்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

நர்சிங் மாணவி திடீர் மாயம்: போலீஸ் விசாரணை

செவ்வாய் 17, செப்டம்பர் 2019 12:17:01 PM (IST)

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Anbu CommunicationsCSC Computer Education

Black Forest Cakes
Thoothukudi Business Directory