» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நகைகளை கேட்டு பெண்ணை துன்புறுத்திய கணவர் உட்பட 4பேர் மீது வழக்கு

வியாழன் 12, செப்டம்பர் 2019 12:33:42 PM (IST)

திருச்செந்தூர் அருகே நகைகளை கேட்டு பெண்ணை அடித்து துன்புறுத்தியதாக கணவர் உட்பட 4பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள செட்டிவிளை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் மகன் துரைசிங் (31). இவருக்கும் நாசரேத் தைலாபுரத்தைச் சேர்ந்த மரிய தங்கசெல்வம் (30) என்ற பெண்ணுக்கும் கடந்த 30.08.2018-ல் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது துரைசிங்கின் நண்பர்கள், உறவினர்கள் பரிசாக அளித்த 18 பவுன் மோதிரங்களை மரிய தஙகசெல்வம் வைத்திருந்தாாம். 

இந்நிலையில், வியாபாரம் தொடர்பாக பணம் தேவைப்பட்டதால் அந்த மோதிரங்களை தருமாறு துரைசி்ங் மனைவியிடம் கேட்டுள்ளார். ஆனால் மரிய தங்கசெல்வம் நகைகளை தர மறுத்துவிட்டாராம். இதனால், துரைசிங், அவரது தந்தை ஜேம்ஸ், தாய் செல்வி, அண்ணன் தேவராஜ் ஆகியோர் அவரை அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதுகுறித்து திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நலையத்தில் மரிய தங்கசெல்வம் புகார் செய்தார். புகாரின் பேரில், துரைசிங் உட்பட 4பேர் மீது இன்ஸ்பெக்டர் மெர்ஸி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

நர்சிங் மாணவி திடீர் மாயம்: போலீஸ் விசாரணை

செவ்வாய் 17, செப்டம்பர் 2019 12:17:01 PM (IST)

Sponsored Ads

Black Forest Cakes

Anbu Communications



CSC Computer Education


Nalam Pasumaiyagam




Thoothukudi Business Directory