» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பள்ளி பேருந்து ஒப்பந்தத்தில் ரூ.1.54கோடி மோசடி : தாளாளர் உட்பட 3பேர் மீது வழக்குப் பதிவு

வியாழன் 12, செப்டம்பர் 2019 12:23:10 PM (IST)

திருச்செந்தூர் அருகே தனியார் பள்ளி பேருந்து ஒப்பந்தம் தொடர்பாக ரூ.1.54 கோடி மோசடி செய்ததாக தாளாளர் உட்பட 3பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரையடுத்த வீரபாண்டிய பட்டனத்தில்  தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தலைமை நிர்வாகியாக பிரான்சிஸ் (55) என்பவரும், தாளாளராக வின்ஸி (47) என்பவரும் உள்ளனர். இப்பள்ளிக்கு 6 பேருந்துகள் வாங்குவதற்காக வீரபாண்டிய பட்டனத்தைச் சேர்ந்த சவுந்தர்லோகு என்பரிடம் ஒப்பந்தம் போட்டுள்ளனர். இதற்காக அவர் ரூ.1.54கோடி பணத்தை பள்ளி நிர்வாகத்திடம் வழங்கினாராம். 

பள்ளியின் தலைமை நிர்வாகி, தாளாளர் முன்னிலையில் ஒப்பந்தம் போடப்பட்டதாம். இதற்கு ஆரோக்கியம் என்பவர் சாட்சி கையெப்பமிட்டுள்ளார். ஆனால் பள்ளி நிர்வாகம், ஒப்பந்தத்தை சவுந்தர் லோகுவிடம் வழங்காமல் வேறு ஒரு நபருக்கு வழங்கிவிட்டதாம். மேலும், அவர் கொடுத்த ரூ.1.54கோடியை திருப்பித் தரவில்லையாம். இதுகுறித்து சவுந்தர் லோகு திருச்செந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முத்துராமன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

நர்சிங் மாணவி திடீர் மாயம்: போலீஸ் விசாரணை

செவ்வாய் 17, செப்டம்பர் 2019 12:17:01 PM (IST)

Sponsored Ads



Nalam Pasumaiyagam

Black Forest Cakes

CSC Computer Education



Anbu Communications



Thoothukudi Business Directory