» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருமணம் செய்வதாக ஏமாற்றிய ரயில்வே ஊழியர் உட்பட 3பேர் மீது வழக்குப் பதிவு

வியாழன் 12, செப்டம்பர் 2019 12:07:05 PM (IST)

கூடுதல் வரதட்சனை கேட்டு திருமணத்தை நிறுத்திய ரயில்வே ஊழியர் மற்றும் அவரது பெற்றோர் மீது தூத்துக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை கீழகூட்டுடன் காடு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்த பெண்ணுக்கும் மதுரை நீயூ எலியட் நகரைச் சேர்ந்த முருகேசன் மகன் வினோத் பிரசாத் (25) என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்து, கடந்த 03.07.19 அன்று திருமணம் நடத்த இருவீட்டாரும் முடிவு செய்தார்களாம். திருமணத்தின் போது 20பவுன் நகை வரதட்சனையாக வழங்குவதாக பெண் வீட்டார் கூறினார்களாம். வினோத் பிரசாத் மதுரையில் ரயில்வே கேட் கீப்பராக வேலைபார்த்து வருகிறார். 

இந்நிலையில் அவரது பெற்றோர், மகன் மத்திய அரசு வேலையில் இருப்பதால் கூடுதல் வரதட்சனை கேட்டுள்ளனர். மேலும், மதுரையில் வேறு ஒரு பெண்ணை மகனுக்கு திருமணம் முடிக்க திட்டமிட்டுள்ளனர். இதன் காரணமாக ஏற்பட்ட பிரச்சனையில் இதனால் திருமணம் நின்றுவிட்டது. தன்னை திருமணம் செய்து கொள்ளதாக மோசடி செய்து விட்டதாக செல்வி புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில், வினோத் பிரசாத் மற்றும் அவரது பெற்றோர் மீது இன்ஸ்பெக்டர் விமலா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Black Forest Cakes

Anbu Communications





Thoothukudi Business Directory