» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஆசிரியர் வீட்டில் நகை, பணம் திருட்டு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

வியாழன் 12, செப்டம்பர் 2019 11:55:27 AM (IST)

தூத்துக்குடியில் ஆசிரியர் வீட்டில் 6 பவுன் நகை, மற்றும் ரூ.20ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி முத்தம்மாள் காலனி, கங்கா பரமேஸ்வரி காலனி, மச்சாது நகரைச் சேர்ந்தவர் மணி மகன் தர்மசீலன் (50). இவர் புதுக்கோட்டையில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டு மாலையில் வீடுதிரும்பியுள்ளார். அப்போது அவரது வீட்டின் கதவிலுள்ள பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். 

மேலும், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 6 பவுன் நகை, ரூ.20ஆயிரம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சிப்காட் காவல் நலையத்தில் அவர் புகார் செய்தார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சந்திரமூர்த்தி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Anbu Communications





Black Forest Cakes



Thoothukudi Business Directory