» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அமமுக தெற்குமாவட்ட செயலாளர் பதவியிலிருந்து இரா.ஹென்றி மாற்றம் - புவனேஸ்வரன் நியமனம்!!

வியாழன் 12, செப்டம்பர் 2019 11:36:06 AM (IST)

அமமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலளார் பதவியிலிருந்து இரா.ஹென்றி  மாற்றப்பட்டு, புவனேஸ்வரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

அமமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்த இரா,ஹென்றி தாமஸ் திடீரென அப்பதவியில் இருந்து மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மேல ஆழ்வார் தோப்பு கிராமத்தைச் சேர்ந்த டாக்டர் புவனேஸ்வரன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இரா.ஹென்றி தாமசுக்கு அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலளாராக சுந்தர்ராஜ் நீடிக்கிறார். மேலும், தேர்தல் பிரிவு செயலராக கடம்பூரைச் சேர்ந்த மாணிக்கராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளளார். தெற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள புவனேஸ்வரன், மக்களவைத் தேர்தலில் அமமுக சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து

கொய்யாப்பழம்Sep 13, 2019 - 01:28:18 PM | Posted IP 162.1*****

அதுவும் போச்சா.....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications

Black Forest Cakes
Thoothukudi Business Directory