» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கயத்தாறில், புதிய தாலுகா அலுவலகம் விரைவில் திறப்பு விழா : அமைச்சர் தகவல்

வியாழன் 12, செப்டம்பர் 2019 7:57:28 AM (IST)

tகயத்தாறில் புதிய தாலுகா அலுவலகம் ஓரிரு மாதங்களில் திறக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

கயத்தாறை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இதையடுத்து கயத்தாறு யூனியன் அலுவலக வளாகத்தில் தாலுகா அலுவலகம் தற்காலிகமாக இயங்கி வருகிறது. தொடர்ந்து கயத்தாறு புதிய பஸ் நிலையம் அருகில் ரூ.2 கோடியே 40 லட்சம் செலவில் புதிய தாலுகா அலுவலகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறுகையில், கயத்தாறில் புதிய தாலுகா அலுவலக கட்டுமான பணிகள் ஓரிரு மாதங்களில் நிறைவு பெற்று திறப்பு விழா நடைபெறும் என்று தெரிவித்தார். கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, சின்னப்பன் எம்.எல்.ஏ., ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, கயத்தாறு தாசில்தார் பாஸ்கரன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் வினோபாஜி, நகர செயலாளர் கப்பல் ராமசாமி, ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் வண்டானம் கருப்பசாமி மற்றும் பலர் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

நர்சிங் மாணவி திடீர் மாயம்: போலீஸ் விசாரணை

செவ்வாய் 17, செப்டம்பர் 2019 12:17:01 PM (IST)

Sponsored Ads


Nalam Pasumaiyagam


CSC Computer Education


Anbu Communications

Black Forest Cakes




Thoothukudi Business Directory