» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 14ம் தேதி அண்ணா சைக்கிள் போட்டி : மாணவ, மாணவியர்கள் பங்கேற்க அழைப்பு

புதன் 11, செப்டம்பர் 2019 4:04:07 PM (IST)

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, வரும் 14-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சைக்கிள் போட்டி நடைபெற உள்ளதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: 2019-ம் ஆண்டிற்கான அண்ணா சைக்கிள் போட்டியினை காலஞ்சென்ற தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளினை சிறப்பிக்கும் வகையில் 14.09.2019 அன்று நடத்தப்பட உள்ளது. அதன்படி, 13, 15 மற்றும் 17 வயதுக்கு உள்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி நடைபெற உள்ளது. 13 வயதுக்கு உள்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ., மாணவிகளுக்கு 10 கி.மீ., 15 மற்றும் 17 வயதுக்கு உள்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ., மாணவிகளுக்கு 15 கி.மீ. இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடம் பெறுபவர்களுக்கு பரிசுகளும்,  முதல் 10 இடம் பெறுபவர்களுக்கு தகுதிச் சான்றிதழ்களும் வழங்கப்படும். போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ-மாணவியர் தங்கள் சொந்த செலவில் இந்தியாவில் தயாராகும் சாதாரண சைக்கிளை கொண்டு வருதல் வேண்டும். சைக்கிள் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ-மாணவிகள் 14.09.2019 அன்று காலை 6.00 மணிக்கு தூத்துக்குடி விளையாட்டரங்கத்திற்கு தலைமையாசிரியரிடமிருந்து பெறப்பட்ட வயதுச் சான்றிதழுடன் வருகைதர வேண்டும். வயதுச் சான்றிதழ் கொண்டு வருபவர்கள் மட்டுமே போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

மிதிவண்டிப் போட்டியில் நேரும் எதிர்பாராத விபத்துகளுக்கும், தனிப்பட்ட பொது இழப்புகளுக்கும் பங்குபெறும் மாணவ-மாணவிகளே பொறுப்பேற்க வேண்டும் என்று ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்த மாவட்ட அளவிலான  சைக்கிள் போட்டிகள் தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் இருந்து  ஆரம்பித்து ஜார்ஜ் ரோடு, பெல் ஹோட்டல் கார்னர், ரோச் பூங்கா, பீச் ரோடு இரயில்வே கேட் வரை சென்று திரும்பவும் அதே வழியில் பனிமயமாதா ஆலயம் வந்தடையும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications

Black Forest Cakes

Nalam PasumaiyagamCSC Computer EducationThoothukudi Business Directory