» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்வது தொடரும் : தெற்கு ரயில்வே அறிவிப்பு

புதன் 11, செப்டம்பர் 2019 3:48:06 PM (IST)

அந்தியோதயா விரைவு ரயில்கள் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்வது தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ரயில்வே வாரியம் தாம்பரம் - நாகர்கோயில் - தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில்களுக்கு கோவில்பட்டி ரயில் நிலையத்தில் சோதனை அடிப்படையில் ஆறுமாதங்கள் நின்று செல்வதற்காக 08.03.2019 முதல் அனுமதி வழங்கியிருந்தது. மறு அறிவிப்பு வரும்வரை இந்த ரயில்கள் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1. வண்டி எண் 16191 :  தாம்பரம் – நாகர்கோயில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் கோவில்பட்டி வரும் நேரம் 10.26 மணி. புறப்படும் நேரம் 10.28 மணி.

2. வண்டி எண் 16192 :  நாகர்கோயில் – தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் கோவில்பட்டி வரும் நேரம் 18.10 மணி. புறப்படும் நேரம் 18.12 மணி.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Nalam Pasumaiyagam



Anbu Communications


CSC Computer Education



Thoothukudi Business Directory