» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மோட்டார் பைக்கில் ஆடு திருட முயன்ற 2பேர் கைது - தூத்துக்குடியில் பரபரப்பு

புதன் 11, செப்டம்பர் 2019 11:50:53 AM (IST)

தூத்துக்குடியில் மோட்டார் பைக்கில் வந்து ஆடு திருட முயன்ற 2பேரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 

தூத்துக்குடி முத்தம்மாள் காலனி 3வது தெருவைச் சேர்ந்தவர் பொன்ராஜ் மகன் பொன்னுதுரை (33). இவர் சொந்தமாக ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று இவரது வீட்டின் முன்பு கட்டிப்போட்டிருந்த ஆடுகள் அலறல் சத்தம் கேட்டு அவர் எட்டிப் பார்த்தபோது பைக்கில் வந்த 2பேர் ஆடுகளை திருட முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவர் சத்தம்போடவே அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். 

பொன்னுதுரை மற்றும் பொதுமக்கள் சேர்ந்து 2பேரையும் மடக்கிப்பிடித்து சிப்காட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சப் இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அவர்கள் தூத்துக்குடி வட்டக்கோவில் தெருவைச் சேர்ந்த சுந்தரபாண்டி மகன் முத்து துரை(29), போல்பேட்டையைச் சேர்ந்த சுயம்புலிங்கம் மகன் இசக்கிராஜா (34) என்பதும், பைக்கில் ஆடு திருட முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2பேரையும் போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

Nalam Pasumaiyagam


Anbu Communications



Black Forest Cakes



Thoothukudi Business Directory