» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மதுபோதையில் தகராறு செய்து காவலரை தாக்கியவர் கைது

புதன் 11, செப்டம்பர் 2019 11:38:40 AM (IST)

கடம்பூர் அருகே மதுபோதையில் பெண்ணிடம் தகராறு செய்து, அதனை விசாரிக்கச் சென்ற போலீஸ்காரரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார். 

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகேயுள்ள சிதம்பரபுரம் கிராமம், மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி கார்த்திகா (33). இவரது வீட்டில் நேற்று (10ம் தேதி) வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது விழாவிற்கு வந்த உறவினர்கள் தங்களது வாகனங்களை பக்கத்து வீட்டு வாசலில் நிறுத்தினார்களாம். இதனால், அந்த வீட்டில் வசிக்கும் அழகர்சாமி (40) என்பவர் கண்டித்து தகராறு செய்தாராம். மேலும், விழா முடிந்த பின்னர், இரவில் மதுபோதையில் மீண்டும் அவர் தகராறு செய்துள்ளார். 

இதுகுறித்து கார்த்திகா போன் மூலம் கடம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து  விசாரிப்பதற்காக விடுதலை பாரதி கண்ணன் என்ற போலீஸ்காரர் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளார். அப்போது, காவலரை பணி செய்யவிடாமல் அழகர்சாமி கீழே தள்ளி தாக்கினாராம். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று அழகர்சாமியை கைது செய்தனர். அவர் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Anbu Communications






Black Forest Cakes



Thoothukudi Business Directory