» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வேளாண்மை கண்காட்சியில் மரக்கன்றுகள் நடும் பணி : ஆட்சியர் துவக்கி வைத்தார்

புதன் 11, செப்டம்பர் 2019 10:53:28 AM (IST)படுக்கப்பத்து கிராமத்தில் நடைபெற்ற ஜல்சக்தி அபியான், கிஸான் மேளா மற்றும் வேளாண்மை கண்காட்சி நிகழ்ச்சியில் 500 மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, துவக்கி வைத்தார்.
 
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஒன்றியம் படுக்கப்பத்து கிராமத்தில், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம், ஸ்காட் வேளாண் அறிவியல் மையம் மற்றும் வேளாண்மைத்துறையின் மூலம் ஜல்சக்தி அபியான், கிஸான் மேளா மற்றும் வேளாண்மை கண்காட்சி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தலைமையில் நடைபெற்றது.  இவ்விழாவில், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, கலந்து கொண்டு, சாத்தான்குளம் ஒன்றியத்தின் மூலம் படுக்கப்பத்து கிராமத்தில், 500 மரக்கன்றுகள் மற்று ஆயிரம்  பனை கொட்டைகள் நடும் பணிகளை துவக்கி வைத்தார். மேலும், விவசாயிகளுக்கு பிரதமந்திரி ஓய்வூதிய விவாசய அட்டை மற்றும் உயிர் உரங்களை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் ஜல்சக்தி அபியான் திட்ட தூத்துக்குடி மாவட்ட மத்திய கண்காணிப்பாளர் / மத்திய கலாச்சார அமைச்சகத்தின் இணை செயலாளர் பிரனாவ் குல்லர், மற்றும் மத்திய ஒன்றிய கண்காணிப்பு அலுவலர் ஜோயா , ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்செந்தூர் கோட்டாட்சியர் தனபிரியா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் தூத்துக்குடி தலைமை விஞ்ஞானி சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாலசுப்பிரமணியன், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சங்கரஜோதி சாத்தான்குளம் வட்டாட்சியர் ஞானராஜ், சாத்தான்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest Cakes

Anbu Communications


Thoothukudi Business Directory