» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ரூ.10¼ கோடியில் 4 அடுக்கு வாகன நிறுத்தம் : கடைகள் இடிக்கும் பணி தொடக்கம்

புதன் 11, செப்டம்பர் 2019 8:44:40 AM (IST)

தூத்துக்குடியில்  ரூ.10¼ கோடி செலவில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்காக கடைகள் இடிக்கும் பணி நேற்று தொடங்கியது.

தூத்துக்குடி நகரின் மையப்பகுதியான ஜெயராஜ் சாலையில் காய்கறி மார்க்கெட் அமைந்து உள்ளது. அந்த பகுதியில் சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனை தவிர்ப்பதற்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஜெயராஜ் சாலையில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தை இடித்து விட்டு ரூ.10 கோடியே 24 லட்சம் செலவில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. 4 மாடியில் அமையும் இந்த வாகன நிறுத்துமிடத்தில் 74 கார்கள், 192 இருசக்கர வாகனங்களை ஒரே நேரத்தில் நிறுத்தும் வகையில் அமைக்கப்படுகிறது. 

முதல்தளத்தில் 12 கடைகளும் அமைக்கப்படுகின்றன. இந்நிலையில் வணிக வளாகத்தை இடிக்க கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மாநகராட்சி சார்பில் அங்குள்ள 31 கடைகளை காலி செய்யும்படி நோட்டீஸ் வழங்கப்பட்டது. உரிய காலஅவகாசம் முடிந்ததையொட்டி மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன் உத்தரவின் பேரில், நேற்று மாலையில் கடைகளை இடித்து அகற்றும் பணியை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டனர். இந்த பணி முடிவடைந்ததும் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் கட்டும் பணிகள் தொடங்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து

தமிழன்Sep 12, 2019 - 07:43:39 PM | Posted IP 162.1*****

பாராட்டுக்கள் . தொடரட்டும் தங்களின் நற்பணி!

a.kannanSep 12, 2019 - 12:43:57 PM | Posted IP 162.1*****

pathazhlasakkadaithittamerpaduseyiunga

e kannan thittamennachuSep 12, 2019 - 12:42:19 PM | Posted IP 162.1*****

ppathazha sakkadai

K.ganeshanSep 11, 2019 - 09:08:02 PM | Posted IP 162.1*****

Congratulations commissioner sir

கர்ணராஜ்Sep 11, 2019 - 07:07:27 PM | Posted IP 108.1*****

பாராட்டுக்கள் நல்ல திட்டத்துக்காக போராடி முன்னேற்ற பாதியில் செல்லும் மாநகராட்சிக்கு மற்றும் ஆணையருக்கும்

TN 69 Govt busSep 11, 2019 - 05:40:14 PM | Posted IP 162.1*****

Sirappu Miga Sirappu.

பொதுமக்கள் .முத்துநகர் கடற்கரை .Sep 11, 2019 - 01:52:00 PM | Posted IP 162.1*****

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் உள்ள கடைகள் அனைத்தும் கடந்த ஒருவாரமாக பூட்டி கிடைப்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். ஆகவே மாநகராட்சி ஆணையாளர் உடனடியாக அங்குள்ள கடைகளை திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும் .

எஸ் kaySep 11, 2019 - 11:32:32 AM | Posted IP 108.1*****

super

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest CakesAnbu Communications


Thoothukudi Business Directory