» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கொள்ளையடிக்க திட்டமிட்ட 5பேர் கும்பல் கைது

செவ்வாய் 10, செப்டம்பர் 2019 5:52:57 PM (IST)

தூத்துக்குடியில் கொள்ளையடிக்க திட்டமிட்ட 5பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தரம் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திரேஸ்புரம் மாதவ நாயர் காலனி அருகே சந்தேகத்திற்கிடமாக நின்ற 5பேரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் சாமுவேல்புரத்தைச் சேர்ந்த மகேஷ்குமார் மகன் டேனியல்ராஜ் என்கிற டேனி(20), ஸ்டேட் பேங்க் காலனியைச் சேர்ந்த ஸ்டான்லி என்பவரது மகன்கள் சாம் ஜோஸ்வா(20) மற்றும் ஜாய்சன் (18), பூபால்ராயர்புரத்தைச் சேர்ந்த அய்யாதுரை கென்னடி மகன் சிம்சன் ஜெனிஸ் ராஜா(25), மற்றும் சங்குகுழி காலனியைச் சேர்ந்த விர்ஜின் மகன் ஆண்டோ ஜோசப் ஜேசுராஜ்(21) என்பதும், அவர்கள் தூத்துக்குடி வெற்றிவேல்புரத்தில் உள்ள ஒரு வீட்டில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியது தெரிய வந்தது. இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பார்த்திபன் வழக்கு பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Anbu Communications


Nalam Pasumaiyagam

CSC Computer Education





Thoothukudi Business Directory