» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் திடீர் மறியல் : 6 பேர் மீது வழக்கு

செவ்வாய் 10, செப்டம்பர் 2019 8:17:42 AM (IST)

கயத்தாறில் விநாயகர் சிலைகள்  ஊர்வலத்தின் போது அனுமதியின்றி  சாலை மறியலில் ஈடுபட்டதாக  இந்து முன்னணி நிர்வாகிகள் 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். 
 
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் கயத்தாறு, கடம்பூர் பகுதிகளில் 18 விநாயகர் சிலைகள் இம்மாதம் 2ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த சிலைகளை விசர்ஜனம் செய்வதற்காக கயத்தாறு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி ஆலயம் முன்பிருந்து இந்து முன்னணி சார்பில் ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை (செப்.8)  புறப்பட்டது. ஊர்வலம், நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கொண்டிருந்த போது, காந்தாரியம்மன் கோயில் தெரு வழியாக செல்ல இந்து முன்னணியினர் முயன்றனர். அப்போது, அனுமதித்த வழித்தடத்தில் தான் ஊர்வலம் செல்ல வேண்டும் என்று காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. 

ஆனாலும்,  இந்து முன்னணி நிர்வாகிகள் மாற்றுப்பாதையில் செல்ல அனுமதி கேட்டு  திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, டி.எஸ்.பி. ஜெபராஜ், காவல் ஆய்வாளர் ஆவுடையப்பன் மற்றும் வருவாய் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து,  தொடர்ந்து அனுமதிக்கப்பட்ட பாதையில்  ஊர்வலம் சென்றது. இந்நிலையில், விநாயகர் சிலைகள் ஊர்வலத்தின் போது அனுமதியின்றி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதாக  இந்து முன்னணி நிர்வாகிகளாக மு.நீதிப்பாண்டியன், ப.பெரியசாமி, ச.மாரிக்காளை, ப.பரமசிவன் என்ற பரமசிவம், ரா.சங்கரவேலு, ரா.மூர்த்தி உள்ளிட்ட 6 பேர் மீது கயத்தாறு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து

JUDESep 10, 2019 - 05:22:20 PM | Posted IP 108.1*****

correct

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

நர்சிங் மாணவி திடீர் மாயம்: போலீஸ் விசாரணை

செவ்வாய் 17, செப்டம்பர் 2019 12:17:01 PM (IST)

Sponsored Ads


Nalam Pasumaiyagam

Black Forest Cakes

Anbu Communications


CSC Computer Education

Thoothukudi Business Directory