» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் வழங்கும் உதவிகளை தடுத்து நிறுத்த வேண்டும்: ஆட்சியரிடம் கோரிக்கை

திங்கள் 9, செப்டம்பர் 2019 3:31:42 PM (IST)ஸ்டெர்லைட் ஆலை வழங்கும் நலத்திட்ட உதவிகளை தடுத்து நிறுத்த வே்ணடும் என மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் வழக்கறிஞர் அரிராகவன் தலைமையில் மடத்தூர், பண்டாரம்பட்டி, மீளவிட்டான், குமாரெட்டியாபுரம், தெற்கு வீரபாண்டியபுரம், சில்வர்புரம், சங்கரப்பேரி, காயலூரனி, சோரீஸ்புரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  

பின்னர் அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு ஆலை நடத்தி வரும் வழக்கில் வெற்றி கிடைக்காது என்ற எண்ணத்தில் குறுக்கு வழியில் மக்கள் ஆதரவைப் பெற மரம் நடுவது, குடிநீர் விநியோகம், கல்வி உதவித்தொகை, நோட்டுப் புத்தகங்கள் வழங்குதல், கிப்ட், மீனவர்களுக்கு மீன்பிடி வலைகள், சாலையோர வியாபாரிகளுக்கு நிழற்குடை, தையல் பயிற்சி, பொதுமக்களுக்கு குடிநீர் கட்டணம் செலுததுவது போன்ற உதவிகளை தாமிரா சுரபி, முத்துச்சரம் போன்ற சமூக அமைப்புகளின் பெயரில் ஸ்டெர்லைட் செய்து வருகிறது. 

ஊரில் உள்ள ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் சிலர் இந்த நலத்திட்ட உதவிகளை பெற்று வருகிறார்கள். ஆனால், ஊரே ஸ்டெர்லைட் உதவியைப் பெறுவது போல பத்திரிக்கைகளில் செய்தி வருகிறது. இது எங்களுக்கு அவமானமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது. அரசாணை மூலம் ஆலை மூடப்பட்ட பின்னர், அரசின் அனுமதியில்லாமல் இதுபோன்ற உதவிகளை சட்ட விரோதமாக செய்து வருகிறார்கள். இதை தடுக்க மக்கள் எழுத்துப்பூர்வமாகவும், நேரில் அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிககை இ்ல்லை. 

எனவே, ஸ்டெர்லைட் ஆலை கொடுக்கும் உதவிகளை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும். மக்களை பிளவுபடுத்தி ஸ்டெர்லைட் ஆலை தரும் நய வஞ்சக உதவிகளால் தூத்துக்குடி சுற்றியுள்ள கிராமங்களில் அமைதி குலைவு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது. எனவே குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டம் 133ன் கீழ் நடவடிக்கை எ்டுத்து தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர். முன்னதாக ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டம் எதிரொலியாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 


மக்கள் கருத்து

மக்கள்Sep 11, 2019 - 10:32:26 PM | Posted IP 162.1*****

மக்கள் கையில் ஆங்கில வாசகங்கள்!! பாமர மக்கள் வாழ்க!! NGO பாத்திமா அக்கா செயல் மாதிரி தோன்றுகிறது

AthiSep 10, 2019 - 12:48:08 PM | Posted IP 108.1*****

Uthavi engira சாக்கு solli மக்களிடம் Aathar number vangi poiyana thavarana karuthai அரசிடமும் Neethi manrathilum koori நாடகம் Aaduthu sterligt aalai .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
jesus redeems

Sponsored Ads

Anbu Communications


Black Forest CakesThoothukudi Business Directory