» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மத்திய கூட்டுறவு வங்கிதலைவர் பதவியேற்பு விழா : அமைச்சர் கடம்பூர் ராஜூ பங்கேற்பு

திங்கள் 19, ஆகஸ்ட் 2019 8:20:36 PM (IST)தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர், துணைத்தலைவர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா இன்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தலைமையில் நடைபெற்றது. 

தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூட்ட அரங்கில், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர், துணைத்தலைவர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ லைமையில் இன்று (19.08.2019) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகநாதன் (திருவைகுண்டம்),சின்னப்பன் (விளாத்திகுளம்) ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், துணைத்தலைவர் கணேஷ்பாண்டியன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் 19 பேர் என மொத்தம் 21 பேர் பதவி ஏற்றுக்கொண்டனர்.

விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியதாவது: தமிழக முதல்வர் 3 மாதங்களுக்கு முன்பாக ஜனநாயக முறையின்படி கூட்டுறவு தேர்தல்களை நடத்தி அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் நிர்வாகிகள் பொறுப்பேற்கும் நல்ல வாய்ப்பினை வழங்கினார். தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் இருந்து படிப்படியாக அனைத்து நிலையான கூட்டுறவு சங்கங்கங்களில் தேர்தல் முறையாக நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் கூட்டுறவு சங்க தேர்தல் வழக்குகள் தொடர்பாக நீதிமன்ற உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தேர்தல் ஜனநாயக முறைப்படி நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அடுத்த ஆண்டில் தமிழக முதல்வரிடம் இருந்து விருது பெறும் வகையில் கூட்டுறவு வங்கி செயல்பட வேண்டும். இதற்கு நிர்வாகக்குழு உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். 

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் தூத்துக்குடி மண்டல இணைப்பதிவாளர் (பொ) இந்துமதி, தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முதன்மை வருவாய் அலுவலர் அருள்சேசு, தேர்தல் அலுவலர் சந்திரா, தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் அந்தோணிபட்டுராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன், முக்கிய பிரமுகர்கள் ஆறுமுகநயினார், அய்யாத்துரை பாண்டியன், ராமச்சந்திரன், வினோபாஜி, சேசுதுரை, நடராஜன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications


Black Forest Cakes


Friends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory