» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி வரும் சபாநாயகருக்கு உற்சாக வரவேற்பு : அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தகவல்

திங்கள் 19, ஆகஸ்ட் 2019 5:43:19 PM (IST)

திருநெல்வேலி மாவட்டம் சுதந்திர போராட்ட வீரர் ஒன்டிவீரன் நினைவு நாள் விழாவில் சபாநாயகர் கலந்துகொண்டு திருவுருவச்சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.

இது தொடர்பாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக செயலாளர் / செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ வெளியிட்ட அறிக்கை : புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர போராட்ட தியாகிகள் அவர்களின் நினைவு நாளினை கொண்டாடும் வகையில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்கள் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசின் சார்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் சுதந்திர போராட்ட வீரர் ஒன்டிவீரன் அவர்களின் நினைவு நாள் விழாவில் கலந்துகொள்ள சபாநாயகர் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு பகல் 12 மணிக்கு வருகை தரவுள்ளார்கள். விமான நிலையத்திற்கு வருகை தரும் சபாநாயகர் அவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க. செயலாளர் / செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் தலைமையில் சிறப்பாக நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க. செயலாளர்/ திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் ஆகியோர்கள் வரவேற்க உள்ளார்கள். மேலும், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், ஒன்றிய செயலாளர்கள், கிளை செயலாளர்கள், முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் வரவேற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார்கள். மேலும், சபாநாயகர் அவர்களை வரவேற்கும் நிகழ்ச்சியில் கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் அதிக அளவில் வருகை தந்து சிறப்பிக்க வேண்டும் என தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க. செயலாளர் / செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கேட்டுக்கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications


Thoothukudi Business Directory