» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண்ணின் கையை வெட்டி ரூ.1¼ லட்சம் நகை பறிப்பு : மர்ம நபர்கள் அட்டகாசம்

திங்கள் 19, ஆகஸ்ட் 2019 5:32:31 PM (IST)

நாசரேத்தில் பெண்ணின் கையை வெட்டி ரூ.1¼ லட்சம் மதிப்புள்ள நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் பிரகாசபுரம் 4-வது தெருவை சேர்ந்தவர் மாயாண்டி(48), ஊட்டி கோத்தகிரியில் உள்ள மளிகை கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பொன்மணி(39). இவர்களுக்கு சதிஷ்குமார்(17), சுரேஷ்குமார்(15) என இரண்டு மகன்கள் உள்ளனர். சதிஷ் கோவையில் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். சுரேஷ்குமார் 10-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். 

இந்நிலையில் இன்று காலை பொன்மணி குப்பை கொட்டுவதற்காக வீட்டின் முன் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது பைக்கில் வந்த 2 பேர், அரிவாளைக் காட்டி மிரட்டி பொன்மனியிடம் செயின் பறிக்க முயன்றுள்ளனர். அப்போது பொன்மணி தடுக்க முயன்றுள்ளார். இதையடுத்து மர்ம நபர்கள் அரிவாளால் பொன்மணியின் கையில் சராமாரியாக வெட்டிவிட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த 5½ பவுன் நகையை பறித்துக்கொண்டு பைக்கில் தப்பிச்சென்றனர். இதன் மதிப்பு ரூ.1.30 லட்சம் ஆகும். 

இந்த சம்பவத்தில் காயம் அடைந்த பொன்மணி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சாத்தான்குளம் டி.எஸ்.பி. பால்துரை, நாசரேத் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் செயினை பறித்து சென்ற 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். பெண்ணின் கையை வெட்டி மர்ம நபர்கள் நகையை பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications


Black Forest Cakes


Thoothukudi Business Directory