» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பாபநாசம் அணையில் இருந்து 26ம் தேதிக்குள் தண்ணீர் திறக்கப்படும் : ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேட்டி

திங்கள் 19, ஆகஸ்ட் 2019 4:33:08 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட பாசனத்திற்காக பாபநாசம் அணையில் இருந்து 26ம் தேதிக்குள் தண்ணீர் திறக்கப்படும் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

தூய்மை கிராமங்களுக்கான விருது மத்திய அரசால் கடந்த 2018ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு கிடைத்தது. நடப்பாண்டில் இவ்விருதிற்கான சர்வே எடுப்பதற்காக மத்திக்குழு தூத்துக்குடி வந்துள்ளது. கிராமங்களில் இக்குழு ஆய்வு மேற்கொள்ளும். 

குடிமராமத்து பணிகளை செப்.15ம் தேதிக்குள் முடிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 422 குட்டைகள், ஊரணிகள், 88 குளங்கள் தூர்வாறு் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 15சதவீத பணிகள் நிறைவடைந்து. முதல்வர் உத்தரவுப்படி செப்.15க்குள் இப்பணிகள் நிறைவடையும். தற்போது பாபநாசம் அணையில் 100 கன அடிக்கு மேல் தண்ணீர் உள்ளது. குடிநீருக்கும் விவசாயப் பணிகளுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என எம்எல்ஏக்கள், விவசாயிகள் வலியுறுத்தியதன் பேரில் தாமிரபரணி ஆற்றில் 1500 கன அடி நீர் திறந்துவிடும்படி தமிழக முதல்வருக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 

அதன்படி வருகிற 26ம் தேதிக்குள் தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் குடிநீர் தேவைக்காக 23 கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் தாமிரபரணி ஆற்றில் 95 சதவீதத்திற்கும் குறையாமல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், ஆத்தூர் ஏரல் பகுதிகளில் அதிகளவு வாழைப் பயிரிட்டுள்ளதாகவும், இதனால் தூர்வாரப்பட்ட குளங்களுக்கு உடனடியாக தாமிரபரணி ஆற்றில் ஷட்டர்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று ஆட்சியர் கூறினார். பேட்டியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், சார் ஆட்சியர் சிம்ரன் ஜித்சிங், மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu CommunicationsFriends Track CALL TAXI & CAB (P) LTDBlack Forest CakesThoothukudi Business Directory