» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கண்மாயை ஆழப்படுத்தும் பணியை கண்காணிக்க வேண்டும்: ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை

திங்கள் 19, ஆகஸ்ட் 2019 4:04:02 PM (IST)துப்பாஸ்பட்டி கண்மாயை ஆழப்படுத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் கண்காணிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம், கீழஅரசடி பஞ்சாயத்து துப்பாஸ்பட்டி கிராம மக்கள், உப்பு தொழிலாளர் சங்க மாவட்ட செயலளார் சங்கரன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதில், "கீழஅரசடி துப்பாஸ்பட்டி கண்மாயை ஆழப்படுத்துகிறோம் என்ற பெயரில் குழிக்கும் மடைக்கும் சம்பந்தம் இல்லாமல் ஜேசிபி இயந்திரம் மூலம் சுமார் 25அடிக்கு மேல் பெரும் பள்ளமாக தோண்டியுள்ளனர். 

அரசு நிர்ணயித்த வரன்முறையின்றி மணல் எடுத்து வியாபாரம் செய்து வருகிறார்கள். மேலும், கண்மாயின் மறுகால் மடை மேல்புறம் கரையை உடைத்து லாரி மூலம் மணல் கொண்டு செல்கிறார்கள். இதனால் கண்மாய்க்கு நீர் பெருகும்போது, வெள்ளம் ஊருக்கும் புகும் அபாயம் உள்ளது. எனவே, கண்மாயை ஆழப்படுத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் கண்காணிக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu CommunicationsThoothukudi Business Directory