» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பொறியாளர் மீது தாக்குதல்: போலீஸ் எஸ்ஐ மீது புகார்

திங்கள் 19, ஆகஸ்ட் 2019 8:33:48 AM (IST)

கோவில்பட்டியில் பொறியாளரை தாக்கியதாக காவல் உதவி ஆய்வாளர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பாரதிநகரைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் பழனிகுமார்(31). பொறியாளர். செண்பகா நகரைச் சேர்ந்தவர் செண்பகலட்சுமி. இவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக தம்பதியினர் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இது தொடர்பாக, செண்பகலட்சுமி அளித்த புகாரின்பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் செண்பகலட்சுமியின் சகோதரர் லட்சுமணன், பழனிகுமார் தன்னை மிரட்டுவதாக புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

இப்புகார் குறித்து விசாரிக்க பழனிகுமாரை குடும்பத்தினருடன் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு வருமாறு உதவி ஆய்வாளர் அழைத்தாராம். ஆனால், விசாரணைக்கு யாரும் வராததையடுத்து நேற்று அதிகாலையில் உதவி ஆய்வாளர், பழனிகுமாரின் வீட்டிற்கு சென்றாராம். அங்கு, உதவி ஆய்வாளருக்கும், பழனிகுமார் குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம்.  இதில், பழனிகுமாரை, உதவி ஆய்வாளர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த பழனிகுமார் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து, பழனிகுமார் அளித்த புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications


Thoothukudi Business Directory