» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அருகே மின்சாரம் பாய்ந்து பெண் பலி

திங்கள் 19, ஆகஸ்ட் 2019 8:32:21 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் இளம்பெண் நேற்று உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரத்தை அடுத்துள்ள கீழமுடி மண் கிராமத்சைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி ராஜேஸ்வரி (39). இவர், வீட்டுக்கு வரும் மின்சார வயரை தாங்கிச் செல்ல நடப்பட்டிருந்த இரும்புக் குழாயில் கை வைத்தவாறு அங்கிருந்த பெண் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தாராம். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் ராஜேஸ்வரி தூக்கி வீசப்பட்டார். இதில், உடல் கருகி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து, ஓட்டப்பிடாரம் காவல் ஆய்வாளர் சிவலிங்கசேகர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Anbu Communications



Thoothukudi Business Directory