» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முன்விரோதத்தில் வாலிபரை தாக்கிய இருவர் கைது

திங்கள் 19, ஆகஸ்ட் 2019 8:30:06 AM (IST)

கோவில்பட்டியில் முன்விரோதம் காரணமாக வாலிபரை தாக்கிய இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வேலாயுதபுரம் 2 ஆவது தெருவைச் சேர்ந்தவர் அய்யாத்துரை (25). சுமை தூக்கும் தொழிலாளி. இவருக்கும், இதேபகுதியைச் சேர்ந்த தொழிலாளிகள் ஜெயமாரியப்பன் (32), ரெங்கநாதன்(32) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம். 

இந்நிலையில் நேற்று முன்தினம் வேலாயுதபுரம் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த அய்யாத்துரையை அங்கு வந்த ஜெயமாரியப்பன், ரெங்கநாதன் ஆகியோர் அவதூறாகப் பேசி, கம்பால் தாக்கினராம். இதில், காயமடைந்த அய்யாத்துரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  புகாரின்பேரில், போலீசா ர் வழக்குப் பதிந்து மேற்கண்ட இருவரையும் கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications


Friends Track CALL TAXI & CAB (P) LTDBlack Forest CakesThoothukudi Business Directory