» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்: டி.எஸ்.பி. தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

திங்கள் 19, ஆகஸ்ட் 2019 8:26:43 AM (IST)நீதிமன்ற உத்தரவை பின்பற்றி விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும் என கோவில்பட்டியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாதுகாப்புக் கமிட்டி உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.  இக்கூட்டத்துக்கு டி.எஸ்.பி. ஜெபராஜ் தலைமை வகித்தார். காவல் ஆய்வாளர்கள் சுதேசன், அய்யப்பன்,  ஆவுடையப்பன், சுகாதேவி, முத்துலட்சுமி மற்றும் உதவி ஆய்வாளர்கள், இந்து முன்னணி, இந்து மகா சபா அமைப்பாளர்கள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.  

கூட்டத்தில், நீதிமன்ற உத்தரவை பின்பற்றி விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும். சிலைகள் வைப்பதற்கு மின்வாரியம், தீயணைப்புப் படை மற்றும் தடையில்லா சான்று பெற வேண்டும். சிலை 10 அடி உயரத்திற்கு மிகாமலும், சாலையில் எடுத்து செல்லும் அளவுக்கு அகலம் குறைவானதாகவும் இருக்க வேண்டும். சிலைக்கு 24 மணி நேரமும் சிலைப் பொறுப்பாளர்கள் இருவர் இருக்க வேண்டும், சிலை வைக்கும் இடத்தில் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்கள் வைக்கக் கூடாது. தீயை அணைக்கக் கூடிய தண்ணீர், மணல் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

ஒலி பெருக்கி முன் அனுமதியை காவல் நிலையத்தில் பெற்று ஒலிபரப்ப வேண்டும். விநாயகர் சிலைகளை விஜர்சனம் செய்ய மாட்டு வண்டி, 3 சக்கர வாகனத்தில் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது.  ஊர்வலத்தின் போது பிற மதத்தினர் மனம் புண்படும் வகையில் கோஷங்கள் எழுப்பக் கூடாது.  பிற மத வழிபாட்டுத் தலங்கள் முன்பு பட்டாசு வெடிக்கவும், பாண்டு வாத்தியங்கள் இசைக்கவும் கூடாது. 2018இல் அனுமதிக்கப்பட்ட ஊர்வலப் பாதையில் நிகழாண்டும் ஊர்வலம் செல்ல வேண்டும். கடந்த ஆண்டைப் போன்று விநாயகர் ஊர்வலம் நடத்த அனுமதிக்கப்படும். விநாயகர் சிலைகளை கடந்த ஆண்டில் சென்ற வழியாகவே, நிகழாண்டும் சென்று சிலைகளை விஜர்சனம் செய்ய வேண்டும் எனக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Anbu CommunicationsFriends Track CALL TAXI & CAB (P) LTD
Thoothukudi Business Directory