» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கொலை வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திங்கள் 19, ஆகஸ்ட் 2019 8:14:54 AM (IST)

தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதான 2 வாலிபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தூத்துக்குடியில் கடந்த 19-7-2019 அன்று குட்டி என்ற நரசிம்மன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தூத்துக்குடி குரூஸ்புரம் சந்தனமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரொசாரி மகன் மரிய அந்தோணி பிச்சை டைட்டஸ் என்ற டைட்டஸ் (22), மட்டக்கடை வடக்கு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் மரிய அந்தோணி சகிலன் என்ற சகிலன் (22) ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இவர்கள் மீது பல்வேறு கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இவர்கள் தொடர்ந்து பொது அமைதிக்கு பங்கம் விளைவித்து வந்ததால், மாவட்ட எஸ்பி அருண்பாலகோபாலன், டிஎஸ்பி பிரகாஷ் ஆகியோர் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, குண்டர் சட்டத்தின் கீழ் டைட்டஸ், சகிலன் ஆகியோரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் பாளையங்கோட்டை சிறையில் அதிகாரிகளிடம் வழங்கினார்.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes



Friends Track CALL TAXI & CAB (P) LTD

Anbu Communications




Thoothukudi Business Directory